Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

Tamil Beauty

Latest Post

வெண்ணெய் என்றதுமே, வெண்ணெயைத் திருடித் தின்னும் கண்ணனின் ஞாபகம்தான் கண்முன் தோன்றும். கறந்த பாலை காய்ச்சி, உறையவைத்து எடுத்து, அதில் கடைந்த வெண்ணெயை குழந்தைகளின் கை நிறைய அப்பிய காலம் மலையேறிவிட்டது. இன்றோ, எப்போதும் சாக்லேட் பார்களையும், சிப்ஸ் வகைகளையும் கையில் வைத்து சுழலும் சுட்டீஸ்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. வளர்ந்துவிட்ட ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் பல பாரம்பரிய உணவு முறைகளைத் தொலைத்து விட்டோம்.


வெண்ணெயில் உள்ள சத்துக்கள் குறித்தும் அதன் நன்மை, தீமைகள் குறித்தும் டயட்டீஷியன் மற்றும் பால் ஆலோசகர் மயூரியிடம் கேட்டோம். 

‘வெண்ணெயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?’ 
‘கொழுப்புச் சத்து மட்டும்தான் அதிகம் உள்ளது. தவிர, ‘வைட்டமின் ஏ’ உள்ளது. இது கண்ணுக்கு மிகவும் நல்லது. புரதம், கார்போஹைட்ரேட், மாவுச் சத்து போன்ற வேறு எந்தச் சத்துகளும் இதில் இல்லை.’ 

‘குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? எப்போது கொடுக்கலாம்?’ 
‘வளரும் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். குறிப்பிட்ட வயதில் சரியான எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெயை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால், உடல் புஷ்டியாகும். அதாவது, நான்கு வயதில் ஒரு குழந்தை 18 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகளுக்கு வயது கூடக்கூட எடை குறையும். இதுபோன்ற நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு வெண்ணெயைக் கொடுக்கலாம். பொதுவாகக் காலை நேரங்களில் சாப்பிடலாம். மாலை, இரவு வேளைகளில் சிறிதளவு கொடுக்கலாம்.’ 

‘யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?’ ‘விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். காசநோய் உள்ளவர்களுக்கும் நல்லது. இது அதிக நேரத்துக்கு உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைவான டீன் ஏஜ் இளைஞர்களும் ஓரளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது.’ 

‘யாரெல்லாம் தவிர்க்கலாம்?’ 
’40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் இல்லாமல் இருந்தால் ஓரளவு எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள், வெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.  வெண்ணெயில் உள்ள கலோரிகள் எளிதில் கரையாது. மேலும் சர்க்கரை நோயாளிகள், இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும். 

ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவும், சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்து மேலும் எடையைக் கூட்டிவிடும்.’ 

‘வெண்ணெய் நல்லதா? அல்லது வெண்ணெயை உருக்கி வரும் நெய் நல்லதா?’ 
‘வெண்ணெயைக் காட்டிலும் நெய் மிகவும் நல்லது. சின்னக் குழந்தைகளுக்கு வெண்ணெயை வாரத்துக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரையிலும், தினமும் ஐந்து முதல் பத்து கிராம் வரை சேர்த்துக்கொடுக்கலாம்.  வளரும் குழந்தைகள் தினமும் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். சூடான சிற்றுண்டிகளில் நெய் பயன்படுத்தினால், வாசனை ஊரைத் தூக்கும், சாப்பிடவும் தூண்டும். உடல் வெப்பத்தைக் குறைக்கும்.’


மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், கிடைக்கும் அற்புதம் இதோ!
தேவையான பொருட்கள்
 • மாதுளம் பழம் - 2
 • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
 • பனங்கற்கண்டு - 5 டீஸ்பூன்
 • உப்பு - 1 சிட்டிகை
 • ஐஸ் கட்டிகள் - 4
 • புதினா - 5
செய்முறை
மாதுளம் பழம், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, நான்கைந்து டீஸ்பூன் பனங்கல்கண்டு, ஒரு சிட்டிகை உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து அதனுடன் ஐஸ் கட்டிகளை கலந்த, புதினா இலைகளை மிதக்க விட்டால், மாதுளம் பழம் ஜூஸ் தயார்.
நன்மைகள்
மாதுளம் பழத்தை ஜூஸ் அல்லது பழமாக சாப்பிட்டால், மன அழுத்தம் குறையும் என்று ஒரு ஜப்பானிய பல்கலைக்கழக ஆய்வு கூறுகின்றது.
ஏனெனில் மாதுளம் பழத்தில் நமது உடல் நலனை மேம்படுத்தக் கூடிய ஆன்ட்டி- ஆக்சிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளாதால், இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் செரட்டொனின் சுரப்பியை தூண்டி, மனதை அமைதிப் படுத்தி, எதிர்மறை ஆற்றலைக் குறைக்கிறது.


தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையாலும், நோய்கள் நிறைந்த சுற்றுச்சூழலாலும் பலரும் இளமையிலேயே நோய்களால் உயிரை இழக்கின்றனர். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் நீண்ட நாள் உயிர் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒருவரது வாழ்நாளை அதிகரிக்க ஒருசில விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். அந்த விஷயங்களைச் சொன்னால், நகைச்சுவையாகத் தான் இருக்கும். ஆனால், உண்மையிலேயே அவைகள் வாழ்நாளின் அளவை நீட்டிக்கும். சரி, இப்போது அந்த விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

புத்தகங்கள் படிக்கவும் 
வாழ்நாளின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். ஆய்வு ஒன்றில், புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, புத்தகப் புழுக்களின் வாழ்நாள் 23 மாதங்கள் நீடித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மிளகாய் 
உணவில் மிளகாயை அதிகம் சேர்த்தால், வாழ்நாளின் அளவு அதிகரிக்கும் என்பது தெரியுமா? 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மிளகாயை உணவில் சேர்த்து வந்தோரின் இறப்பு விகிதம் 13% குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

சமூக சேவை 
சமூக சேவைகளை அதிகம் செய்து வருவோரின் வாழ்நாள் நீடிப்பதாக 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுவும் தாமாக முன்வந்து சமூக சேவைகளை செய்வோரின் இறப்பு விகிதம், சமூக சேவைகளை செய்யாதவர்களை விட குறைவாக இருப்பதாக கூறுகின்றனர்.

நல்ல சமூக வாழ்க்கை 
நண்பர் கூட்டம் அதிகமாக கொண்டோரது வாழ்நாள் அதிகரிப்பதாக 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது பெரும்பாலானோர் தனிமையையே விரும்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து, அதுவே பலரது சந்தோஷத்தை சீர்குலைத்து, வாழ்நாளைக் குறைத்து விடுகிறதாம்.

கடவுள் நம்பிக்கை 
பலரும் இது ஒரு மூடநம்பிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நமக்கு மேல் ஒரு சக்தி நிச்சயம் உள்ளது. அந்த சக்தியைத் தான் நாம் தெய்வ உருவங்களின் வடிவில் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவும் அப்படி வழிபடும் போது, மனம் ஒருநிலைப்படுத்தப்படுவதால், மனம் அமைதியாகி, உயிரைப் பறிக்கும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடக்கூடும்.

விரதம் 
நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்ததற்கு காரணம், அவர்கள் அடிக்கடி மேற்கொண்ட விரதம் தான். இப்படி அடிக்கடி விரதம் மேற்கொள்ளும் போது, நம் நோயெதிர்ப்பு மண்டலம் புத்துயிர் பெறும், புற்றுநோயின் தாக்கம் குறையும், வயது அதிகரிக்கும் போது தாக்கும் நோய்களின் அபாயம் குறையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதாக 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.


தைராய்டு பிரச்சனைக்கான காரணங்கள் மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், நோயெதிர்ப்பு குறைபாடு போன்றவை தான்.
ஆனால் தைராய்டு பிரச்சனையை இயற்கை வழியில் போக்க ஒரு அற்புதமான வைத்திய முறையை ரஷ்ய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதுவும் வெங்காயத்தைக் கொண்டு தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கி, தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
தைராய்டு பிரச்சனையை போக்க என்ன செய்ய வேண்டும்?
இரவில் தூங்குவதற்கு முன், ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதன் சாறு எடுத்து கழுத்தின் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பின் கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இதனால் தைராய்டு பிரச்சனையை வராமல் தடுக்கலாம் என்று ரஷ்ய மருத்துவர்கள் கூறுகின்றனர்.


பனை மரத்தை போல் 60 முதல் 80 அடி உயரத்துக்கு ஓங்கி வளருகின்ற கொடப்பனை மரங்கள், பழங்காலங்களில் அழகுக்காக வீடுகளில் அதிக அளவில் வளர்க்கப்பட்டுள்ளன. இப்போது இந்த மரங்களை காடுகளில்தான் பார்க்க முடிகிறது. இந்த வகை மரங்கள் கூந்தல் பனை, காலிப்பனை, விசிறிப்பனை என்ற புனை பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.

தாவரவியலில் இந்த மரத்துக்கு ‘கோர சாசு‘ என்று பெயர். பனை மரத்தின் ஓலைகள் போலத்தான் இதனுடைய ஓலைகளும் காணப்படுகின்றன. இந்த வகை மரங்கள் 120 ஆண்டு வரை வளருகின்றன. 40 முதல் 70 ஆண்டுகளுக்கு மேல்தான் பூக்கும் தன்மையை பெறுகிறது. ஒரு முறை பூ பூப்பதோடு இதன் வாழ்நாள் முடிந்து விடுகிறது.

பெரிய அளவில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பூக்கள், நன்றாக விரிந்து ஒருவித மணம் வீசுகிறது. மரத்தின் உச்சி பகுதியில்தான் பூவை பார்க்க முடிகிறது. இதன் ஓலைகள் தொப்பி, ஓலை சுவடிகள், கதகளி விசிறிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி குன்னம்பாறை வருக்கவிளையை சேர்ந்த நேசையன் (70) என்பவரது வீட்டில் இந்த அரியவகை மரத்தை பார்க்க முடிகிறது. இவரது பாட்டி கொடப்பனை மரத்தை வீட்டின் அருகே நட்டு பராமரித்து வந்துள்ளார். 120 வருடமாக வீட்டில் வளர்ந்து வரும் இந்த மரம் இப்போதுதான் பூத்துள்ளது....!

மிகச் சுவையான புடலங்காயில் நாம் அறிந்திராத வகையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும்.
மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.
விதைகள் வயிற்றுக்கு துன்பம் தருவதாக இருக்கும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை.
அடங்கியுள்ள சத்துக்கள்
100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரோட்டீன் 0.5 கிராமும், கொழுப்புச்த்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோகிராமும் , விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
புடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது, மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது.
புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.
விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும்.
புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.
இந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும்.
இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.
புடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10மி.லி அளவுக்கு உள்ளுக்குப் புகட்டுவதால் பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.
இளம் வழுக்கையா?
இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத் தருவதாக இருக்கும்.
புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.


அன்றாடம் உணவில் பருப்பினை சேர்த்துக்கொண்டால் உடலில் செரிமானம் சீராக நடக்கும்.
அதுமட்டுமின்றி, பெருங்குடல் இயக்கம் சிறப்பாக நடைபெறும், சத்துக்களின் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதயத்தின் நலனை பாதுகாக்க பருப்புகளை சாப்பிடுங்கள்.
புரதம்
ஒரு கப் பருப்பில் ஏறத்தாழ 18 கிராம் புரதச்சத்து இருக்கிறது. பருப்பு உணவுகளில் சிறந்தளவிலான புரதம் கிடைக்கிறது. இது புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகள் அதிகம் உண்டாகாமல் இருக்க பயனளிக்கிறது.
செரிமானம்
எளிதாக செரிமானம் ஆக உதவும் உணவுகளில் பருப்பு உணவுகள் சிறந்தவை. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் பெருங்குடல் புற்றுநோய் உண்டாகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
இதய பாதுகாப்பு
பருப்பு உணவுகளில் இருக்கும் போதுமான அளவு ஃபோலேட், மெக்னீசியம் இதய நலனை ஊக்குவிக்கின்றன. ஃபோலிக் அமிலம் இதய சுவர்களை வலுப்படுத்தவும், இதய நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயனளிக்கிறது.
இரும்புச்சத்து
இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் ஏதேனும் ஒரு பருப்பு உணவை வேகவைத்து உண்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
மினரல்ஸ், ஆண்டி- ஆக்ஸிடன்ட்ஸ்
மெக்னீசியம், ஜின்க், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக பருப்பு உணவுகளில் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் எ மற்றும் சி உடலில் சேதமடைந்துள்ள செல்களை புத்துயிர் அளிக்கிறது.
புற்றுநோய்
பருப்பு உணவுகளில் இயற்கையாகவே புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இருக்கிறது. இது புற்றுநோய் உண்டாக்கும் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.


பேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
அத்தகைய பேரிச்சம்பழத்தை 14 நாட்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ!
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
 • தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத் தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
 • பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், அது சிறந்த ஒரு வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
 • பேரிச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
 • பேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற திறனை அதிகரிக்கச் செய்கிறது.
 • கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.


உடலில் உண்டாகும் பலப்பல பாதிப்புகளை வீட்டிலிருக்கும் அருமையான ஆடுர்வேத உணவுகளால் குணப்படுத்தும் நீங்கள் கேள்விப்படாத முறைகள் இங்கே விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

உடலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வராமல் இருக்காது. தும்மினால் உடனே அலோபதியை தேடி போவது மிகப்பெரிய தவறு. பக்கவிளைவுகள் அல்லாத நமது உணவுப் பொருட்களினால் சிறு பாதிப்புகளை குணப்படுத்துவதே மிகவும் சிறந்தது. இதனால் பக்க விளைவுகளை தவிர்க்கலாம்.

நோயின் தீவிரத்தை தடுக்கலாம். ஆகவேதான் அந்த காலத்தில் உணவே மருந்து என்று பெரியோர்கள் சொன்னார்கள். தலைவலி, அல்சர் , மலச்சிக்கல் என குடல் மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உணவின் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என மருத்துவர்களே சொல்வது தான். அந்த மாதிரியான அற்புதமான குறிப்புகளை இங்கே காண்போம்.

மூச்சுத் திணறலுக்கு : 
மூச்சுத் திணறல் அதிகம் இருந்தால், 200 மி.லி தேங்காய் எண்ணெயில், 10 கிராம் ஒமத்தைப் பொரித்து வடிகட்டி, இளம் சூட்டோடுக் கற்பூரத்தையும் கரைத்து, முதுகு, நெஞ்சுப் பகுதிகளில் தடவ, மூச்சுத்திணறல் சட்டெனக் குறையும்.

அல்சர் : 
அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரில், மணத்தக்காளி கீரையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சீரகம் கலந்து, மை போல் இருக்கும் பதத்தில் சாப்பிட, அல்சர் புண்கள் குணமாகும்.

பல் வலி : 
பல் வலிக்கு, ஒரு கிராம் தோல் நீக்கிய சுக்கு, ஓர் ஏலக்காயில் உள்ள விதைகள் (ஏல அரிசி), மூலிகைச் சாம்பிராணி ஆகியவற்றை, சம அளவில் எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்த விழுதை, வலி இருக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால், வலி குறையும். மேலும், வலி இருக்கும் இடத்தில் ஒரு மெல்லியத் துணியில் ஐஸ் கட்டியைப் போட்டு ஒத்தடம் கொடுக்க, வலி குறையும்.

சைனஸ் : 
தோல் நீக்கிய சுக்குப் பொடியை, எலுமிச்சைச் சாறு அல்லது வெந்நீரில் கலந்து, தலையில் பற்றுப் போட, சைனஸ் தலைவலி குறையும். ஒற்றைத் தலைவலி, அலுப்பு, வெயில், டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் தலைவலிக்கு, மஞ்சளை அடுப்பில் சுட்டு, அந்த புகையைச் சுவாசிக்கலாம்.

மலச்சிக்கல் : 
காய்ந்த கறுப்பு திராட்சை, அத்திப்பழத்தை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, நன்றாக மசிந்ததும் வடிகட்டி, அந்தச் சாற்றை ஐந்து முதல் 10 மி.லி குடிக்கக்கொடுத்தால், மலச்சிக்கல் சரியாகும்.

இரவில், ஐந்து கிராம் திரிபலா சூரணத்தை, வெந்நீரில் கலந்து சாப்பிட்டுவர, பெரியவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. தினமும் ஒரு செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வரலாம்.


கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை உண்டாகும்.

கோபத்தை கட்டுப்படுத்துவதில் செம்பருத்தி முக்க பங்கு கொண்டுள்ளது. மேலும் பல நோய்களை குறிப்பாக இத்ய நோய்களை தடுக்கும் சக்தி பெற்றது. வீரியமிக்க செம்பருத்தியை உண்ணும் முறஒயால் பலவித நோய்களை கட்டுபப்டுத்தலாம். வாங்க பாக்கலாம்.

கோபம் : 
செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.

சூடு தணிய : 
செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல் - 1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்.

இதய பாதிப்புகள் : 
கல்லீரல், இருதயம், சிறு நீரக வியாதிக்கு செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

ரத்த சோகை : 
பூக்களைச் சேகரித்து அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் எடுத்து பசும் பாலில் கலக்கி காலை, மாலை ஆகாரத்துக்கு முன், மூன்று தினங்கள் சாப்பிட்டால் ரத்தசோகை நீங்கும். இதய பலவீனம் நீங்கும். மூளையின் செயல்பாடுகள் பலம் பெறும். இரத்தவிருத்தி உண்டாகும்.

சிறு நீரக பாதிப்பு : 
செம்பருத்திப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து, 250 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக ஊறும்படி வைத்திருக்கவேண்டும். நன்றாக ஊறியபின் இந்த நீரைக் குடித்து வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். நீரடைப்பு, நீர் எரிச்சல் உடனே நிவர்த்தியாகும்

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget