Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

கொசுவர்த்தி சுருளினால் ஏற்படும் ஆபத்துக்கள் இவ்வளவு அதிகமா?

Advertisement



கொசுக்களை விரட்ட பெரும்பாலான மக்கள் கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துகிறார்கள். கொசுவர்த்தி சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த கொசுவர்த்தி சுருளை மணிக்கணக்காக பூட்டிய அறைக்குள் எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த நிலையிலே கொசுவர்த்தி கொளுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.

தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுதல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படும். தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல், நோய்த்தொற்று ஏற்படும். வறட்டு இருமல் அதிகமாக வரும். ‘சைனசிடிஸ்’ ஏற்பட்டு மூக்கு அடைத்துக்கொள்ளும். சில நேரம் மூக்கின் உள்ளே தொற்றுக்கிருமிகள் அதிகமாகி சீழ் கூட பிடிக்கலாம். ஆரம்ப அறிகுறிகளின் போதே அலர்ஜி உள்ளவர்கள் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகையால் நுரையீரலும் பாதிப்படைகிறது. கொசுவர்த்தி புகை நுரையீரலை அழற்சி அடையச் செய்து ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது. இதனால் சிலருக்கு ‘ஆஸ்த் மாடிக் அட்டாக்’ கூட ஏற்படும். கொசுவர்த்தி புகையை சுவாசிப்பது என்பது 100 சிகரெட் குடிப்பதற்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலர் ஏசி செய்யப்பட்ட அறையில் கொசுவர்த்தியை கொளுத்துவார்கள். இதனால் புகையானது அறையைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றும். தொடர்ந்து இதை சுவாசித்தால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் கேன்சராக கூட மாறலாம்.

சிலர் கொசுக்களை விரட்ட மின்சாரத்தில் இயங்கும் திரவங்களைப் பயன்படுத்துவார்கள். இதுவும் முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. இவற்றை உபயோகித்தால் அறை மற்றும் ஜன்னல் கதவை கொஞ்சமாக திறந்து வைக்க வேண்டும். அறையில் காற்றோட்டம் இல்லையென்றால், கொசு விரட்டித் திரவங்களும் தும்மல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொசுவை விரட்டும் க்ரீம்களை தடவிக் கொள்வது கூட சிலருக்கு தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

பைப்புகள் மூலம் அடிக்கப்படும் கொசு மருந்துகளால் ஏற்படும் புகைமண்டலமே சிலருக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சைனஸ் உள்ளவர்களுக்கு இடைவிடாத தும்மல் ஏற்படும். இப்படி புகை போடும் போது துணியால் மூக்கையும் வாயையும் மறைத்து கட்டிக்கொள்ள வேண்டும். கொசுக்களை விரட்ட சிலர் ஸ்பிரே அடிக்கிறார்கள். இது மூச்சுத்திணறல், தலைசுற்றல் ஆகிய பின்விளைவுகளை கொண்டுவரும்.

அதனால் கொசுவை விரட்ட நல்ல தரமான துணிகளில் தயாரிக்கப்பட்ட கொசு வலைகளை பயன்படுத்தலாம்.

கொசு விரட்டிகளை தவிர்த்து, கொசுக்களை விரட்டும் வழிகள்:

* வீட்டில் உள்ள அறைகளை காற்றோட்டமாக வைக்க வேண்டும். ஜன்னல்களை இறுக மூடி வைக்கக் கூடாது.

* ஜன்னல்களில் சிறிய நுண்துளையுள்ள கொசு வலைகளை அடித்து வைப்பதால் காற்றோட்டமும் இருக்கும். கொசுக்களும் உள்ளே வராது.

* கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும்.

* வீட்டின் உள்ளே மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதாது… வீட்டைச் சுற்றி கழிவுகள், குப்பைக் கூளங்கள் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* கொசுவை நேரடியாக அடித்துக்கொல்லும் பேட்டரியில் இயங்கும் பேட் இப்போது கிடைக்கிறது. டென்னிஸ் பேட் வடிவத்தில் இருக்கும். இதனை பயன்படுத்துவதால் கொசுக்களிடம் இருந்து எளிதாக தப்பிக்க முடியும்.

* தரமான கொசு வலைகளை படுக்கையறையில் பயன்படுத்துவதன் மூலம் சுகமான நித்திரையைப் பெற முடியும்.

* கொசுவிரட்டி க்ரீம்கள், ஸ்பிரே, லிக்யூட்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்த்துவிட வேண்டும்.

* நம் முந்தைய தலைமுறை பயன்படுத்திய நொச்சி இலைகளை நெருப்பி லிட்டு புகை மூட்டும் வழிமுறையும் பயன்தரும்.

கொசுவர்த்தி புகையை சுவாசிப்பது என்பது 100 சிகரெட் குடிப்பதற்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




Advertisement
You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget