Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

வடை, பஜ்ஜி சாப்பிட செய்தித்தாளை பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்தா?


நம்மூர் வாசிகள் நியூஸ் பேப்பர் இல்லாமல் பஜ்ஜி சாப்பிடமாட்டார்கள். எண்ணெய்யுடன் கூடிய பஜ்ஜியை நியூஸ் பேப்பரில் அமுக்கி தேய்த்து அவர்கள் சாப்பிடும் அழகே தனி தான். பஜ்ஜி சாப்பிடுவதால் பல்வேறு கெடுதல் வரும்னு சொல்வாங்க ஆனால் அதை விட கெடுதல் பஜ்ஜி சாப்பிட நியூஸ் பேப்பரை பயன்படுத்துவது.

செய்தி தாள்கள் செய்திகளை படிப்பதற்காக பயன்படுத்துவதை விட அதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாப்பிட்டு விட்டு கைகளை துடைப்பதற்கு அதை அதிகமாக பயன்படுத்துகிறோம். சிறிய உணவகங்கள், தெருவோர கடைகளில் அதிகமாக செய்தி தாள்களையே கை துடைக்க பயன்படுத்துகின்றனர்.

செய்தி தாள்களை இப்படி பயன் படுத்துவதால் பல்வேறு ஆபத்துகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். செய்தித்தாளில் கை துடைப்பது சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின் ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது.

செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது உலர்வாக இருக்கும்வரை எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அதில் தண்ணீர் படும்போது பிரச்சினை பெரிதுதான். பலர் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை குறைக்க செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து.

செய்தித்தாளில் உள்ள காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் செல்ல இது வழிவகை செய்கிறது. இந்த காரீயம் உடலுக்குள் சென்று சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கின்றன. இவ்வாறு வயிற்றுக்குள் செல்லும் காரியம் கழிவாக கூட வெளியேறுவது இல்லை உள்ளேயே சேர்ந்து கொண்டு இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த காரியம் உடலுக்குள் சிறிதளவு சென்றால் கூட ஆபத்து தான், இதனால் தான் சமீபத்தில் மேகி நூடுல்ஸில் காரியம் இருப்பதால் அதற்கு எதிர்ப்பும், தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.



Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget