Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

எந்த நிறத்தில் எந்த விட்டமின் உள்ளது ?

Advertisement



தொடர்புடைய படம்

விஞ்ஞானி ஐசாக் நியூட்டன் 1666 ம் ஆண்டு வெண்மை நிறம் என்பது சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், வயலட் இன்டிகோ நிற ஒற்றுமையால் வருகிறது என கண்டுபிடித்தார். நமது கண்ணுக்கு பல்வேறு நிறங்கள் தெரிவது அதன் அலை நீளத்தைப் பொருத்ததாகும்.

ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்கள் மிகவும் சூடானவை. உடலைத் தூண்டக் கூடியவை. அதற்கு மாறாக நீலம், வயலட், இண்டிகோ நிறங்கள் குளி்ச்சியானவை பச்சை நிறம் இரண்டிற்கும் இடையில் உள்ளது எனலாம்.

நம்மைச் சுற்றி பல நிறங்கள் உள்ளன. நமக்கு அதன் மகத்துவம் தெரிவது இல்லை நமது உடலில் ஏற்படுகின்ற வாதம், பித்தம் , கபம் ஆகியவைதான் நோய்க்கு மூல காரணம் என்பது யாவரும் அறிந்ததே.

வாதத்தைக் கட்டுபடுத்துவது பச்சை நிறம்.

பித்தத்தைக் கட்டுப்டுத்துவது நீல நிறம்.

கபத்தை கட்டுப்படுத்துவது சிகப்பு நிறம்.

ஒருவருக்கு நோய் வருகிறது என்றால் இந்த நிறத்தில் மாறுபாடு இருந்தால் நோய் வரும் எனலாம்.

பச்சை நிறம்

இந்தநிறம் இயற்கையின் நிறமாகும். இதில் குளிர்ச்சியும் சூடும் கிடையாது. உடம்பில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. கிருமிகளை அழிக்கிறது. பச்சை நிறம் கண்ணுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும். ஏன் என்றால் பச்சை நிறத்தைப் பார்த்தாலே கண்ணின் தசைகள் தானாக இயங்க ஆரம்பிக்கும்.

நீல நிறம்

நீல நிறம் குளிர்ச்சியைக் கொடுக்கும். இரத்த ஒழுங்கை நிறுத்தும். காய்ச்சலைக் குறைக்கும். தொண்டை நோயைக் குறைக்கும். எனலாம். மனதிற்கு ஆறுதலைக் கொடுத்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நீல நிற எண்ணெய்யை உடலில் தடவினால் தானாக தூக்கம் வரும்.

சிகப்பு நிறம்

இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடம்புக்கு வெப்பத்தைக் கொடுக்கும். நரம்புகளைத் தூண்டி விடும். இது இரத்தத்தில் ஏற்படும் அத்தனை நோய்க்கும் மருந்தாகும். இந்த நிறத்தைக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு உள்ள நேரத்தில் உபயோகிக்கக் கூடாது.

அனைத்து நிறமும் கலந்த வெள்ளை நிறம்.

வெள்ளை நிறம் சூரிய ஒளி ஆகும். சூரிய ஒளி மருத்துவம் பற்றி அனைவரும் அறிந்துள்ளனர். அது ஒரு டானிக் ஆகும். நேரடியாக சூரிய ஒளியில் நின்றாலே நமது உடலுக்கு விட்டமின் டி கிடைக்கிறது.

எந்த நிறத்தில் உள்ள உணவுப் பொருட்களில் எந்த விட்டமின்  உள்ளன என்பதைப் பார்ப்போம்.

சிகப்பு – விட்டமின் பி 12

ஆரஞ்சு — விட்டமின் பி

மஞ்சள் – விட்டமின் ஏ

லெமன் – விட்டமின் சி

வயலெட் – விட்டமின் டி

ஸ்கார்லெட் – விட்டமின் இ

இன்டிகோ – விட்டமின் கே

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




Advertisement
You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget