Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

காது வலிக்கு நிவாரணம் தரும் கற்றாழை!

Advertisement

கற்றாழை க்கான பட முடிவு


பனிக்காலம் பல்வேறு தோல், சுவாசக் கோளாறு மற்றும் தொற்று நோய்கள் வேகமாக உருவாக்குகின்றது. உங்களின் உட்புற காதில் தோல் வறண்டு சீரற்ற முறையில் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றதா?

அரிக்கும் தோல், செதில் போன்ற மற்றும் பிளவுபட்ட உள் காது தோல்களுக்கு பின்னால் ஈஸ்ட் அல்லது பூஞ்சை வளர்ச்சி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, காலநிலை மாற்றம், மற்றும் புதிய ஷாம்பு பயன்பாடு போன்ற பல்வேறு சிக்கலான அல்லது எளிய காரணங்கள் இருக்கலாம். உங்களின் காதுகளை பாதுகாக்கக் கூடிய 10 வீட்டு வைத்திய முறைகள் உள்ளன.

அதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.

கற்றாழை :

கற்றாழையில் உள்ள அலிசின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் தோலின் pH நிலையை மீட்டு வீக்கத்தை குறைக்கின்றது. ஒரு கற்றாழையின் ஜெல்லை எடுத்து ஒரு விரலில் எடுத்து உங்களுடைய உள் காதின் சீரற்ற தோலில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

உங்களுடைய வறண்ட தோல் கற்றாழை சாற்றை உறிஞ்சிக் கொள்ளும் வரை விட்டு விடுங்கள். ஒரு நாளைக்கு இரு முறை இதை செய்திடுங்கள்.

ஆப்பிள் சைடர் வினிகர் நோய் எதிர்ப்பு குணங்கள் நிறைந்த இது பூஞ்சையை அழித்து, அரிப்பை தடுத்து காதைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்திகரிக்கின்றது.

சம அளவு தண்ணீர் மற்றும் ஆப்பிள் சாறு வினிகர் கலந்து காதைச் சுற்றியுள்ள பகுதியை மசாஜ் செய்யவும்.

சுமார் 20 நிமிடங்கள் ஆற விட்ட பின்னர் அதை ஒரு ஈரமான துண்டு சுத்தமாக துடைத்து விடுங்கள். இந்த சிகிச்சையை ஒரு நாளைக்கு ஒரு முறை செய்யவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் பூண்டு எண்ணெய் இரு எண்ணெய்களிலும் ஒன்றாக பூஞ்சை எதிர்ப்புத் திறன், பாக்டீரியா அழிப்புத் திறன் உள்ளது.

எனவே இந்தக் கலவையை காதில் தடவும் பொழுது இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

இந்த இரு எண்ணைய்களையும் சம விகிதத்தில் கலந்து உங்கள் காதுகள் மீது மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பின்னர் அதை சுமார் 20 நிமிடங்கள் உலர விட்டு அதை தண்ணீர் கொண்டு மெதுவாக துடைத்து எடுக்க வேண்டும்.

ஆல்கஹால் ஒரு பங்கு ஆல்கஹாலுடன் ஒரு பங்கு வினிகர் கலக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு சில துளிகள் உங்களுடைய உள் காது பகுதியில் சேர்க்க வேண்டும்.

ஒரு சில நொடிகள் அப்படியே விட்டு விட்டு அதன் பின்னர் காதை மறு புறம் சாய்த்து இந்த துளிகளை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும்.

ஆல்கஹால் உங்களுடைய காதில் உள்ள மெழுகை கரைத்து விடும். வினிகர் உங்களுடைய காதில் உள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெயில் தோலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் காதுகளில் உள்ள சீரற்ற மற்றும் உலர்ந்த சருமத்தை நீக்க உதவும் வைட்டமின் ஈ மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் அதிக அளவில் உள்ளன.

உங்களுடைய உள்ளங்கையில் ஒரு சில துளிகள் பாதம் எண்ணெய் எடுத்து அதை உங்களுடைய காதைச் சுற்றி தடவி மற்றும் மெதுவாக மசாஜ் செய்து ஒரு நாள் இரவு முழுவதும் உலர விடுங்கள். இந்த சிகிச்சையை ஒரு நாளைக்கு ஒரு முறை மேற்கொள்ளுங்கள்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget