Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ? இதோ விரிவான விளக்கமும் இயற்கை வைத்தியமமும்

Advertisement


"கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ...." என்று சொல்லிக் கொண்டே போனாள்.

அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின. அவரை நோட்டமிட்டேன்.

வயது அய்ம்பது இருக்கும். 'வதனமே சந்திரபிம்பமோ' என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.

அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்
குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை,
மறதி,
மனச் சோர்வு, தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு.

நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.
"உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்" என்றேன்.

"எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?" என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.

தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கழலை என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.


பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.


சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது
குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.

தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட
அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது
நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம்.

புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம்.
எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.

மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.

ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்
வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும்.
காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது.
மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

வீட்டு வைத்தியம் 

பசலைக்கீரை சாறு, இஞ்சி சாறு ஆகியவற்றில் கொள்ளை ஊற வைத்து பொடியாக்கி, சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் கழுத்து கழலை நோய் குறையும்.

தேவையான பொருள்கள்

பசலைக்கீரை.
இஞ்சி.
கொள்ளு.
சிறிய வெங்காயம்.

செய்முறை:

100 மில்லி பசலைக்கீரை சாறு, 100 மில்லி இஞ்சி சாறு ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து,  காய வைத்து பொடியாக்கி தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் க‌ழுத்து க‌ழ‌லை நோய் குறையும்.



எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget