Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

நீங்கள் எதற்காக சேனைக்கிழங்கை சாப்பிட வேண்டும்

Advertisement


ஒவ்வொரு வகையிலான உணவிலும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளன. மரக்கறி உணவில் கிழங்குகள் முக்கியமாக திகழ்கின்றது. அத்தகைய கிழங்குகளில் சேனைக்கிழங்கு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. அதனைப் பற்றி காண்போம்.

you should eat yam for these reasons

சேனைக் கிழங்கு சக்கரை வள்ளிக் கிழங்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இவை ஸ்டார்ச் நிறைந்த டையோஸ்கோரா ஜீனஸ் இனத்தின் வேர் ஆகும்.

இது செதில் நிறைந்து காணப்படும். மேழும் இதில் மிக குறைந்த அளவே பீட்டா கரோட்டின் உள்ளது. கார்போஹைட்ரேட் நிறைந்த மற்றும் கிழங்கு வகைகளில் மிகவும் முக்கியமான இது, ஆப்பிரிக்காவில் தோன்றி படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது.

சக்கரை வள்ளிக் கிழங்கு போலல்லாமல், சேனைக்கிழங்கு அளவில் பெரிதாக இருக்கின்றது. அதோடு இதனுடைய தோல் தடிமனாக இளஞ்சிவப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். உலக அளவில் நைஜீரியா அதிக அளவிலான சேனைக் கிழங்கை உற்பத்தில் செய்கின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சேனைக்கிழங்கு நம்முடைய உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றது. அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஆற்றலின் உறைவிடம்: 
இந்த வகை கிழங்குகளில் மிகவும் சிக்கலான கார்போஹைட்ரேட் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து போன்றவை இருக்கின்றன. இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றந்து.

செரிமானத்திற்கு மிகவும் நல்லது: 
சேனைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குறைக்கின்றது. மேழும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது மற்றும் இது உணவில் உள்ள நச்சுத் கலவைகளை சமன்படுத்தி புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.

சர்க்கரை ஒழுங்குபடுத்துகின்றது:
சேனைக் கிழங்கு மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீடை கொண்டிருக்கின்றது. எனவே இது இரத்தத்தில் சக்கரையின் அளவு உடனடியாக உயர்ந்து விடாமல், ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றது.

வைட்டமின் பி யின் உறைவிடம்: 
சேனைக்கிழங்கில் அதிக அளவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருக்கின்றது. மேலும் இது உடலுக்குத் தேவையான பல்வேறு நுண்ணூட்ட சத்துக்களை வழங்குகின்றது. இந்த வைட்டமின்கள் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கின்றது.

வைட்டமின் சி யின் ஆதாரம்:
சேனைக் கிழங்கில் அதிக அளவிலான விட்டமின் சி உள்ளது. இது வயது முதிர்ச்சியை தடுக்கின்றது. இந்த விட்டமின்கள் எலும்புகளை வலுவாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. அதோடு இதில் உள்ள இதில் உள்ள விட்டமின் ஏ தோலை பளபளப்பாக்குகின்றது. மேழும் இது இரவு பார்வையை அதிகரிக்கின்றது. புற்று நோயை தடுக்கின்றது. அதோடு இது நுரையீரலை பாதுகாத்து பற்குழிகள் வராமல் தடுக்கின்றது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது:
சேனைக்கிழங்கில் தாமிரம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல்வேறு தாதுக்கள் உள்ளன. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை தடுத்து இதயத்தை பாதுகாக்கின்றது. இதில் உள்ள இரும்பு இரத்த சிவப்பணு உருவாக்கத்திற்கு தேவைப்படுவதால் சேனைக் கிழங்கு இரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.

கொப்புளங்களை குணப்படுத்த உதவுகிறது: 
சேனைக் கிழங்குகள் பல்வேறு கிழக்கு ஆசிய நாடுகளில் மருந்துகளில் ள் பயன்படுத்தப்படுகின்றது. இதில் உள்ள அலந்தோயின், கட்டி மற்றும் கொப்புளங்களை குணப்படுத்தத உதவுகின்றது. எனவே இந்த மருந்துகளை உடலில் தடவும் பொழுது கொப்புளங்கள் சீக்கிரம் குணமாகின்றன. மேழும் இது பசியைத் தூண்ட உதவுகின்றது. எனவே இது மூச்சுக்குழாய் பிரச்சனை சிகிச்சைக்கு பயன்படுகின்றது.

மாதவிடாய்: 
இந்த கிழங்கின் சபோனின் என்கின்ற சாரங்கள் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றது. எனினும் இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன

சேனைக் கிழங்கை எவ்வாறு உட்கொள்வது: 
வெட்டிய கிழங்கை அப்படியே திறந்த வெளியில் விடக் கூடாது. கிழங்கை வெட்டிய பின்னர் அதை வேகமாக உட்கொள்ள வேண்டும். மேழம் இந்த கிழங்கை அப்படியே பச்சையாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதில் உள்ள சில இயற்கையான நச்சுக்கள் (ஒரு சில ஜப்பனீஸ் வகைகள் தவிர) உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். எனவே இதை நன்கு சமைத்த பின்பே உட்கொள்ள் வேண்டும்.


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget