Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

August 2016


கூந்தலை டிரிம் செய்யுங்கள். கூந்தலின் அடிப்பகுதியான நுனி பிளவு படுவது சகஜம். ஆனால் முடிப்பிளவு இருந்தால், முடி வளர்வது பாதிக்கப் படும். ஆதலால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை டிரிம் செய்து கொள்வது அவசியம். லீவ் இன் (leave in) கண்டிஷனர் என்று சொல்லக் கூடிய கூந்தல்சீரத்தைத் தொடர்ந்து பயன்படுத் துகையில், பிளவுகள் ஏற்படாது.

பப்பாளி மாஸ்க்
மசித்த பப்பாளி பழத்துடன் 2 ஸ்பூன் யோகர்ட் கலந்து, தலை மற்றும் கூந்தலில் தடவி ஷவர் கேப்பை போட்டுக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவால் அலசுங்கள்.

வைட்டமின் இ மாத்திரைகள்வைட்டமின் இ எண்ணெய் நிறைந்த மாத்திரைகளை இளஞ்சூடான நீரில் போட்டு, அதை கரைத்து பிளவுகள் ஏற்பட்ட அடி முடியில் தடவிவர, பிளவுகள் வராது.

எண்ணெய் கலவை மாஸ்க்பாதாம் மற்றும் தேங்காய் எண்ணெயை சமஅளவில் கலந்து, நுனிமுடியில் தடவிக்கொள்வதால் பிளவுகள் ஏற்படாது

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




“செல்களின் விபரீத மரபணு மாற்றமே புற்றுநோய்க்கு காரணம்”
மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

எனவே புற்றுநோயை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இந்த ஆய்வாளர்கள், அத்தோடு கூட மரபணுக்களில் ஏற்படும் விபரீத மாற்றங்களால் மட்டுமே உருவாகும் மூன்றில் இரண்டுபங்கு புற்றுநோய்களை அவற்றின் தோற்றத்தின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகளையும் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

“மரபணுக்களின் விபரீத மாற்றங்களே எலும்பு புற்றுநோய்க்கு காரணம்”
மனிதர்களுக்கு புற்றுநோய் வருதற்கு அடிப்படை காரணம் அவர்களின் உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் விபரீத மாற்றம். நம் உடலில் இருக்கும் எல்லா அங்கங்களிலும் வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மடிந்து மறைவதும் அவற்றின் இடத்தை புதிய செல்கள் வளர்ந்து நிரப்புவதும் இயல்பாக தொடர்ந்து நடக்கும் அன்றாட செயல். நம் உடலில் இருக்கும் குருத்தணுக்களில் இருந்து இப்படி புதிய செல்கள் தோன்றி வளரும் சமயத்தில் சில செல்களில் மட்டும் ஏற்படும் விபரீதமான மரபணு மாற்றமானது, அவற்றை புற்றுநோய் தோற்றுவிக்கும் செல்களாக மாற்றிவிடுகிறது என்பது விஞ்ஞானிகளின் விளக்கம்.

இப்படியாக குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் திடீரென புற்றுநோய்க்கான செல்களாக மாறுவது ஏன் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். உடலில் தோன்றும் எத்தனையோ கோடி செல்களில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன என்பது இவர்களின் ஆய்வின் மையப்பொருள்.

இந்த ஆய்வின் முடிவு தற்போது சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் இப்படி செல்களுக்குள் நடக்கும் விபரீத மரபணு மாற்றம் காரணமாகவே உருவாவதாகவும் அதற்கும் ஒருவரின் பழக்க வழகங்களுக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
“புகைபிடித்தல் கல்லீரல் புற்றுநோயை தூண்டும்”

அதேசமயம், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவர் உண்ணும் தவறான உணவுகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களால் ஊக்குவிக்கப்படுவதையும் இவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

எனவே ஒருவருக்கு புற்றுநோய் வருவது என்பது அடிப்படையில் அவரது உடலில் இருக்கும் செல்கள் தம்மை புதுப்பித்துக்கொள்ளும் நடைமுறையில் இருந்து ஆரம்பிப்பதாக இந்த ஆய்வை மெற்கொண்ட ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி மற்றும் பொது சுகாதாரத்திற்கான புளூம்பெர்க் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் அடிப்படையில் புற்றுநோய்களை இரண்டு வகையானவைகளாக பிரிக்கலாம். அதாவது, ஒருவரின் செல்களில் நடக்கும் விபரீத மரபணு மாற்றத்தால் உருவாகும் புற்றுநோய்கள் மற்றவை ஒருவரின் பழக்கவழங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள்.

இதில் ஒருவரின் மரபணுவில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகும் முக்கியமான புற்றுநோய்கள் என்பவை மூளையில் தோன்றும் ஒரு புற்றுநோய், வயிற்றின் சிறுகுடலில் தோன்றும் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவை என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட புற்றுநோய்கள் தோன்றாமலே தடுப்பது என்பது இன்றைய நிலையில் இயலாது என்னும்போது அவை தோன்றுவதை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிப்பது அவற்றை குணப்படுத்த உதவும் என்கிறார் இந்த ஆய்வாளர்களில் ஒருவரான கிறிஸ்டியன் டோமசெட்டி.

அதேசமயம் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள் என்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பனவற்றில் ஒருவகை தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குதப்புற்றுநோய் ஆகியவை முக்கியமானவை


“மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்களுக்கு மனித தவறுகள் காரணமல்ல”
இதில் குறிப்பிட்ட ஒருவகை தோல் புற்றுநோய் சூரிய ஒளியில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தூண்டப்படுகிறது; புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயை தூண்டுகிறது, மோசமான உணவுப்பழக்கம் மற்றும் குடும்ப மரபணுக்களால் குதப்புற்றுநோய் தூண்டப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எனவே சிலவகையான புற்றுநோய்கள் வேண்டுமானால் விபரீத மரபணு மாற்றங்கள் காரணமாக உருவாகலாம். ஆனால் மற்றவகை புற்றுநோய்களை ஒருவரின் பழக்கவழக்கங்கள் தூண்டுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் ஐக்கிய ராஜ்ஜியத்தின் புற்றுநோய்க்கான ஆய்வு மையத்தின் மருத்துவர் எம்மா ஸ்மித்.

இவை தவிர பரவலாக மனிதர்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் சுரப்பிகளில் தோன்றும் புற்றுநோய்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

எனவே புற்றுநோயை ஊக்குவிக்கும் பழக்கவழக்கங்களை தவிர்ப்பது, மற்றும் புற்றுநோய்களை அவற்றின் ஆரம்பகட்டங்களிலேயே கண்டுபிடித்து உடனடி சிகிச்சை அளிப்பது ஆகிய இரண்டுவகையான அணுகுமுறைகளும் சம அளவில் கைக்கொள்வதே உலக அளவில் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக பார்க்கப்படும் புற்றுநோயை கையாள்வதற்கான மருத்துவ வழிமுறைகள் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

பெரும்பான்மையான புற்றுநோய் வகைகள் நமது தீய பழக்க வழக்கங்களால் வருவதை விட துரதிருஷ்டத்தாலேயே வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய்க் கலங்கள்
உடலின் சில திசுக்கள் ஏனைய திசுக்களைவிட மிக இலகுவாக புற்றுநோய் கிருமிகளால் தாக்கப்பட்டுவிடுகின்றன. அவை ஏனைய பல திசுக்களைவிட பல லட்சக்கணக்கான மடங்கு இலகுவாக புற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகிவிடுகின்றன. ”இது ஏன்?” என்பதை அறிய ஆய்வாளர்கள் பல பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி, புற்றுநோய் வகைகளில் மூன்றில் இரண்டு பங்கானவை காரணம் எதுவும் இன்றி எதேச்சையாகவே தொற்றிவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மிகவும் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய சில வகை புற்றுநோய்கள் புகைத்தல் போன்ற, எமது தீய பழக்க வழக்கங்களாலேயே ஏற்படுகின்றன.

ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் எப்போதுமே கொடிய வகை புற்றுநோய்களில் இருந்து உங்களை காக்கும் என்று ”கான்ஸர் ரிசேர்ச் யூகே” என்ற அமைப்பு கூறுகின்றது.

உடலின் சில திசுக்கள் ஏனைய திசுக்களைவிட மிக இலகுவாக புற்றுநோய் கிருமிகளால் தாக்கப்பட்டுவிடுகின்றன. அவை ஏனைய பல திசுக்களைவிட பல லட்சக்கணக்கான மடங்கு இலகுவாக புற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகிவிடுகின்றன. ”இது ஏன்?” என்பதை அறிய ஆய்வாளர்கள் பல பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி, புற்றுநோய் வகைகளில் மூன்றில் இரண்டு பங்கானவை காரணம் எதுவும் இன்றி எதேச்சையாகவே தொற்றிவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மிகவும் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய சில வகை புற்றுநோய்கள் புகைத்தல் போன்ற, எமது தீய பழக்க வழக்கங்களாலேயே ஏற்படுகின்றன.

ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் எப்போதுமே கொடிய வகை புற்றுநோய்களில் இருந்து உங்களை காக்கும் என்று ”கான்ஸர் ரிசேர்ச் யூகே” என்ற அமைப்பு கூறுகின்றது.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத் தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புக ளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட்கிரகிப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




ஆண்களை தங்கள் முகத்தை அழகாக வெளிப்படுத்த செய்யும் ஓர் செயல் தான் ஷேவிங் செய்வது. ஆனால் அப்படி ஷேவிங் செய்யும் ஆண்களுக்கு, ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படக்கூடும். இதற்கு காரணம், அவர்களுக்கு சரியான முறையில் ஷேவிங் செய்ய தெரியவில்லை என்று தான் கூற வேண்டும். ஷேவிங் க்ரீம் தீர்ந்துவிட்டதா? கவலையவிடுங்க…

ஆம், ஷேவிங் செய்வதற்கு ஒருசில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், ஷேவிங் மூலம் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைத் தடுக்கலாம். இங்கு ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படாமலிருக்க ஒருசில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, அதன்படி ஷேவிங் செய்து வந்தால், நிச்சயம் அப்பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் என்று தெரியாதா…?

குளுமைப்படுத்தவும்

ஷேவிங் செய்யும் முன், முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சூடான நீரில் கழுவுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் சுடுநீரில் கழுவினால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகி, அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சுடுநீரினால் சருமத்திற்கு அருகில் உள்ள சிறு இரத்த நாளங்கள் உடைய வாய்ப்புள்ளது.

10 நிமிடம் அமரவும்

காலையில் தூங்கி எழுந்ததும், மற்ற வேளைகளை விட இத்தருணத்தில் முகம் சற்று வீங்கி இருக்கும். எனவே தூங்கி எழுந்ததும் உடனேயே ஷேவிங் செய்வதைத் தவிர்த்து, 10 நிமிடம் கழித்து ஷேவிங் செய்யுங்கள்.

விடுமுறை தேவை

வாரத்திற்கு ஒருநாளாவது ஷேவிங் செய்யாமல் இருங்கள். இதனால் முகச் சருமத்திற்கு சற்று ஓய்வு கிடைக்கும். இல்லாவிட்டால், சரும செல்களுக்கு ஓய்வு கிடைக்காமல், முகம் பொலிவிழந்து காணப்படும். மேலும் மென்மையிழந்தும் இருக்கும்.

ஷேவிங் ஜெல் தடவும் முறை

ஷேவிங் ஜெல் அல்லது க்ரீமை கைவிரலால் தடவி, வட்ட வடிவில் தேய்த்து விட வேண்டும். ஏனெனில் கன்னத்தில் வளரும் முடியானது ஒவ்வொரு திசையில் வளர்வதால், வட்ட வடிவில் தேய்த்து விடும் போது, அனைத்து பகுதியிலும் க்ரீம் பரவி, கன்னங்களில் உள்ள முடி எளிதில் வெளியே வருவதற்கு ஏற்றவாறு வழி செய்யும்.

மென்மையாக ஷேவ் செய்யவும்

பல ஆண்களும் சற்று அழுத்தி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியே வந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் தற்போதைய மார்டன் ரேசர்கள் லேசான அழுத்தத்தைக் கொடுத்தாலே, முடி முழுவதும் வெளியேறக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை. அழுத்தம் குறைவாகக் கொடுப்பதால், எரிச்சலும், அரிப்புக்களும் குறையும்.

சுடுநீர் குளியல்


தாடியை இன்னும் சௌகரியமாக எடுக்க வேண்டுமானால், சுடுநீர் குளியலை மேற்கொண்ட பின் இறுதியில் எடுக்கலாம். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து மென்மையாக இருக்கும். இப்போது எடுப்பதன் மூலம் தாடியை மிகவும் சுலபமாக நீக்கலாம்.

எதிர் திசையில் ஷேவிங் வேண்டாம்

சில ஆண்கள் முடி வளரும் திசைக்கு எதிர்திசையை நோக்கி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியேறும் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படி செய்தால், சருமத்தில் வெட்டுக்காயங்களுடன், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும். எனவே எப்போதுமே முடி வளரும் திசையை நோக்கியே ஷேவிங் செய்யுங்கள்.

ஷேவிங் ஆயில்

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ஷேவிங் லோஷன் பயன்படுத்தினால், அதனால் மேலும் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் ஏற்படுத்தும். எனவே ஷேவிங் லோசன் பயன்படுத்துவதற்கு பதிலாக கடைகளில் விற்கப்படும் ஷேவிங் ஆயிலைப் பயன்படுத்தலாம். இதனால் சரும வறட்சியும் தடுக்கப்படும், எரிச்சல் மற்றும் அரிப்பும் வராமல் இருக்கும்.

கற்றாழை

அடிக்கடி ஷேவிங் செய்து வரும் ஆண்களின் முகச்சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருப்பதோடு, வறட்சியடையவும் செய்யும். எனவே ஷேவிங் செய்த பின்னர் இறுதியில் கற்றாழை ஜெல்லைக் கொண்டு கன்னங்களில் மசாஜ் செய்யுங்கள்.

ஆஃப்டர் ஷேவ்

ஷேவிங் செய்து முடித்த பின் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோசனில் ஆல்கஹால் இருப்பதால், அது சருமத்தை வறட்சியடைச் செய்வதோடு, எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே ஆஃப்டர் ஷேவ் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆஃப்டர் ஷேவ் பாம் அல்லது மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள்.

மழுங்கிய பிளேடு வேண்டாம்

ஒரே பிளேடை பல நாட்களாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஒரு வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் பிளேடை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் முகத்தை பதம் பார்த்துவிடும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும்.

இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

ஷேவிங் வேக்ஸிங் செய்வதால் முடி வளர்ச்சி தூண்டிவிடப்பட்டு அடர்த்தியாக வளரவும் வாய்ப்புகள் உண்டு என்பதை பெண்கள் மறந்துவிட கூடாது.

சில மருத்துவ நிலைகள், மற்றும் உட்கொள்ளும் சில மருந்துகளின் காரணங்களால் கூட முடி வளர்ச்சி தூண்டிவிடப்படலாம்.

எனவே, முதலில் ஏன் முகத்தில் முடி வளர்ச்சி தோன்றுகிறது என பெண்கள் கண்டறிய வேண்டும். பிறகு, அதற்கான தனிப்பட்ட சிகிச்சைகள் மூலம் வளர்ச்சியை தடுக்கும், குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

மரபணு!

இந்தியா, மத்திய தரைக்கடல், கிழக்கு ஆசியா, ஐரோப்பிய பெண்களுக்கு தான் அதிகமாக தேவையற்ற முடி வளர்ச்சி முகத்தில் தோன்றுகின்றன. இதற்கு காரணம் மரபணு அல்லது இனத்தின் பாரம்பரியம் என ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை!

சில மருத்துவ நிலை தாக்கம் ஆண்களுக்கான ஹார்மோனை பெண்கள் உடலில் அதிகமாக சுரக்க செய்யும். இதனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் முகத்தில் முடி வளர வாய்ப்புகள் உண்டு!

மருந்துகள்!

உட்கொள்ளும் சில மருந்துகளின் தாக்கம் கூட உடல் மற்றும் முகத்தில் அதிக முடி வளர்ச்சியை தூண்டும். இதன் காரணமாக கூட பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி தோன்றலாம். சில வகை ஸ்டெராய்டுகள் கூட இந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சி!

பெண்களின் முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க மற்றுமொரு காரணமாக இருப்பது ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சி. ஆண்ட்ரோஜன்கள் ஆண்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்.

ஆனால்,பெண்களின் உடலிலும் சிறியளவு ஆண்ட்ரோஜன்கள் இருக்கும். ஏதேனும் தூண்டுதலால் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் போது முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.

கருத்தடை மாத்திரைகள்!

கருத்தடை மாத்திரைகள் கூட ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சியை தூண்டலாம். இதனாலும், பெண்களின் முகத்தில் திடீரென முடி வளர்ச்சி தோன்றவும் / அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

வேறு காரணங்கள்!

வலிப்பு, ஒற்றைத்தலைவலி, மனச்சிதைவு நோய், உயர் இரத்த அழுத்தம், போன்ற வேறு காரணங்களாலும் கூட பெண்களின் முகத்தில் முடியின் வளர்ச்சி தோன்ற வாய்ப்புகள் உண்டு.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




வெங்காயம் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை சிரப் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகள் கொண்டுள்ளது.

இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஒட்டத்தை சீராக்குவதில் இருந்து, பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை சிறக்க வைப்பது வரை பல நன்மைகள் தரவல்லது இந்த இயற்கை சிரப்.

இனி, வெங்காயம், தேன் கொண்டு தயாரிக்கப்படும் சிரப்பை எப்படி தயாரிப்பது? இதனை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என பார்க்கலாம்…

வெங்காயம் – 1தேன்

வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்…,

வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J.

மெல்லிசாக வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

ஒவ்வொரு ஸ்லைஸ் வெங்காயத்திலும் தேனை ஒரு டீஸ்பூன் அளவு தெளிக்கவும்.

ஒரு ஸ்லைஸ் வெங்காயத்தின் மீது மற்றொன்று என அடுக்கவும்.

24 மணிநேரம் இதை ஊறவிடுங்கள்.

மறுநாள் நீங்கள் ஊறவைத்த இந்த பாத்திரத்தில் சிரப் போன்ற நீர் தங்கியிருக்கும்.

இதை குடித்து வரவும்.

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.

சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் சீக்கிரம் குணமடையலாம்.

இதில் இருக்கும் ஆண்டி-கொலஸ்ட்ரால், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவும்.

இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க பயனளிக்கும்.

செரிமானத்தை ஊக்கவிக்கும் தன்மை கொண்டது இந்த சிரப்.

நீரிழிவுக்கு சிறந்த மருந்து இது. இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உடல் நலத்திற்கு உதவும்.

இருமல் உள்ளவர்கள், இருமலை தடுக்க / குறைக்க ஒரு டீஸ்பூன் இதைக் குடித்து வரலாம்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை 28 சதவிகிதம் குறைக்கும் சக்தி தயிருக்கு உண்டு என்பதை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் முன்னணி விஞ்ஞானியாக செயல்பட்டுவரும் டாக்டர் நிரா பரோஹி, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பால் புளிப்பு பொருட்களின்(தயிர்) அனைத்து வகைகளும் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் வகைகளும் நீரிழிவு நோய் வருவதற்கான 24 சதவிகித வாய்ப்பைத் தடுக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்.

உயர்ரக புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்களுக்கு பால் பொருட்கள் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன.

ஆனால் கொழுப்பு சத்தும் அதில் நிறைவாக இருப்பதால் உணவு விதிமுறைகள் மக்களை இவற்றைக் குறைவாக உபயோகிக்கும்படி தெரிவிக்கின்றன.

ஆயினும் குறைந்த கொழுப்பு கொண்ட மற்ற பால் உற்பத்திப் பொருட்களுடன் 85 சதவிகித அளவு தயாரிக்கப்படும் தயிரினை ஆய்வு செய்யும்போது நீரிழிவினைத் தவிர்ப்பதற்கான அதிக அளவு வாய்ப்பு இதில் தென்பட்டுள்ளது.

இந்த சோதனை தனியாரிடத்தில் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளப்படும் தயிரும் நீரிழிவைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை முடிவுகள் சோதனைகளால் நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும் புளிக்க வைக்கப்பட்ட பால் பொருட்களில் வைட்டமின்-டி, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன.

மேலும் நொதித்தல் பலனாக உருவாகும் வைட்டமின்-கே, புரோபயாடிக் பாக்டீரியாக்கள் நீரிழிவு நோய்க்கெதிரான நல்ல பலன்களைத் தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் நமது உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகள் நமக்கு அதிகம் கிடைக்கும்போது தயிர் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் நமது உடலுக்கு நன்மை தரும் என்று தெரிவிக்கும் இத்தகைய ஆய்வுகளும் நமது சுகாதாரத்திற்கு உறுதியளிக்ககூடிய ஒன்றாகும் என்று டாக்டர் பரோஹி கூறுகின்றார்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.

இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்து கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர்.

சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது.

அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும்.

இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும்.

இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும்.

இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும்.

இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.

அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.

அதனை அப்படியே ஏதேனும் ஓர் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது.

சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.

மேலே கூறியது போலவே நண்பர் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார். விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார்.

அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார்.

சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை.

இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடித்திருக்கிறார் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்.

உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?அப்படியென்றால் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை, அந்த  புரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும்
உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது.

இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட
உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .மைதா எப்படி தயாரிகிறார்கள் ? நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்.


அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது.

இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது.

ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது.மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது.

நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும் இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,

எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய
தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும்
சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.





எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




ஆண்களும், பெண்களும் அன்றாடம் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த பிரச்சனைக்காக பலரும் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைகளைப் பெற்று வருவார்கள். முதலில் முடி உதிர்வதற்கு காரணம் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் மோசமான டயட், மன அழுத்தம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை முக்கிய காரணங்களாகும்.

ஒருவருக்கு அழகே முடி தான். அந்த முடி உதிர்ந்தால், உங்கள் அழகு பாழாகும். அதிலும் ஆண்கள் அளவுக்கு அதிகமாக டென்சன் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால், அதன் விளைவாக முடி அதிகம் உதிர்ந்து சொட்டைத் தலையை சந்திக்கின்றனர். மேலும் சொட்டை விழுந்தால் தலைமுடி மீண்டும் அவ்வளவு எளிதில் வளராது. ஆனால் போதிய சிகிச்சைகளை எடுத்து வந்தால், நிச்சயம் வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

அதற்கு மருத்துவரிடம் சென்று பணம் செலவழிப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றினால் சொட்டை தலையில் முடியை வளரச் செய்யலாம். இங்கு முடி உதிர்வதைத் தடுக்கவும், சொட்டைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

மீன் புரோட்டீன் பவுடர் (Marine Protein Supplement)

முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் அதிக அளவில் தேவைப்படும். அதிலும் இந்த பவுடர் கடல் மீனில் இருந்து பெறப்படுகிறது. இந்த புரோட்டீன் பவுடரில் மெர்குரி மற்றும் இதர டாக்ஸின்கள் இருக்காது. மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. ஆய்வு ஒன்றிலும் கடல் மீனில் இருந்து தயாரிக்கப்படும் புரோட்டீன் பவுடர் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டோக்ட்ரினொல் கேப்ஸ்யூல்

டோக்ட்ரினொல் கேப்ஸ்யூலில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இது தலைமுடியின் அடர்த்தியான வளர்ச்சிக்கு தேவையான ஓர் சத்து. இந்த கேப்ஸ்யூலை தினமும் 100 மிகி அளவில் எடுத்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் தலைமுடி உதிர்வது குறையும்.

மெலடோனின் நீர்மம்

இது மற்றொரு சிறப்பான சொட்டைத் தலைக்கான பொருள். இந்த நீர்மம் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை தினமும் ஸ்கால்ப்பில் தடவி வந்தால், மெலடோனின் ஹார்மோன் உடலில் உற்பத்தி செய்யப்பட்டு, நல்ல சீரான தூக்கத்தைப் பெற செய்வதோடு, முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

பூசணிக்காய் விதை எண்ணெய்

கேப்ஸ்யூல் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர அத்தியாவசிய கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, அதன் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். அதற்கு பூசணிக்காய் விதை எண்ணெய் கேப்ஸ்யூலை தினமும் 400 மிகி அளவில் எடுத்து வர வேண்டும். இதனால் சொட்டைத் தலையிலும் முடி வளர்வதைக் காணலாம்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெயை தினமும் தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தடவி மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி 4 வாரம் தொடர்ந்து செய்து வர வேண்டும். மேலும் தலைக்கு ஷாம்பு போடும் போது, அத்துடனும் சிறிது புதினா எண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த செயல்களின் மூலம் வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, முடி உதிரும் பிரச்சனை இருந்தால் குறையும்.

மைனாக்சிடிலின் கரைசல்

இந்த கரைசல் மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை தினமும் ஸ்கால்பில் சில துளிகள் ஊற்றி தடவி, மசாஜ் செய்யாமல், அழுத்தி விட வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

ஆலிவ்

ஆயில் ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் இரவில் படுக்கும் போது தலையில் தடவி வந்தால், தலையில் இரத்த ஓட்டம்அதிகரித்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும். மேலும் இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், இது முடிக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடி உதிர்வதையும் தடுக்கும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




உடல் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் சிறுநீரக ஆரோக்கியம் முதன்மையானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சிறுநீரகம் தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் மற்றும் தினமும் 10-150 குவாட்ஸ் இரத்தத்தை வடிகட்டுகிறது.

மேலும் சிறுநீரகம் உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும், எலக்டோலைட்டுகளின் அளவை சீராக பராமரிக்கும், இரத்த அழுத்தத்தை சீராக்கும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்யும்.

இவ்வளவு முக்கிய பணிகளைச் செய்யும் சிறுநீரகம் சரியாக இயங்காமல், நோயால் பாதிக்கப்பட்டு, ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டால், அதனால் உயிரை இழக்கவும் நேரிடும்.

சரி, இப்போது சிறுநீரகம் மோசமான நிலையில் இருந்தால் தென்படும் அறிகுறிகள் குறித்து காண்போம்.

சிறுநீர் கழிக்கவே முடியாமல் தவிப்பது, நுரையுடனான சிறுநீர் வெளியேற்றம், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது அழுத்தத்தை உணர்வது போன்றவை சிறுநீரகத்தில் கோளாறு உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் இருந்தால், உடலில் உள்ள அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படாமல் தேங்கி, உடலில் ஆங்காங்கு வீக்கத்தை சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

சிறுநீரக கோளாறு இருந்தால், இரத்தத்தில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, அதனால் வாய் துர்நாற்றம் அல்லது சுவையில் மாற்றத்தை உணரக்கூடும். சிறுநீரக பிரச்சனை முற்றிய நிலையில் இருந்தால், அவர்களால் உணவின் சுவையை உணர முடியாமல் இருப்பதோடு, பசியின்மையால் அவஸ்தைப்படுவார்கள்.

இன்னும் சில நேரங்களில், சிறுநீரக நோய் இருந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவும் ஹார்மோனின் அளவு குறைந்து, உடலில் உள்ள செல்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், உடல் மிகுந்த சோர்வடையும். இது அப்படியே நீடித்தால், அதனால் இரத்த சோகையால் கூட பாதிக்கப்படக்கூடும்.

மேல் முதுகு பகுதியில் வலியை உணர்ந்தால், சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அதனால் மூச்சுவிடுவதில் கூட சிரமத்தை உணர நேரிடும்.

சிறுநீரகம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருந்தால், இரத்த சோகை முற்றி, அதனால் எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போய், தலை பாரம், தலைச்சுற்றல் மற்றும் ஞாபக மறதி போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.

சிறுநீரகம் சரியாக இயங்காமல் இருந்தால், சிறுநீரகங்களில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, சருமத்தில் கடுமையான அரிப்பை சந்திக்கக்கூடும். எனவே சருமத்தில் அரிப்பு கடுமையாக இருந்தால், சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே அதை கவனியுங்கள்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசிப்பவர்களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் சரியான

உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. வீட்டில் சாதம், கூட்டு, பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைப்பது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கின்றன. வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கப்படும் நேரங்களில் இசையை ஈடுபாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும். டி.வி பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அந்த மாதிரியான தொந்தரவுக்கு இடம் கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்து விடுங்கள்.

வீட்டில் பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கு இல்லாமல் சிதறிக் கிடந்தால் எரிச்சல் ஏற்படும். இப்படி சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம். குடிரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்திடுங்கள். கொதிக்க வைத்து ஆறியபின் அதை குடிநீராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும். வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்களிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளை தெரிந்து வைத்திருங்கள்.

தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கட்டும். பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும். பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்யவேண்டும். திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அதிக பேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் இன்முகத் தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளின் பாதி பசியை போக்கிவிடும். புத்தகங்களை படிப்பது போல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்று பதிவுகளையும் படிப்ப தன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம். தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




வெள்ளைத் தோலைப் பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது. ஒவ்வொருவரும் தாங்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று தான் விரும்புகிறோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களை தினமும் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் எப்பலனும் கிடைத்தபாடில்லை. மேலும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவதால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடும். ஆனால் சரும நிறத்தை அதிகரிக்க இயற்கை வழிகளை நாடினால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான ஃபேஸ் பேக் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது

மாதுளை தோல்
இந்த ஃபேஸ் பேக்கில் முக்கிய பொருளாக இருப்பது மாதுளை தோல். மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

மாதுளை தோல் பொடி தயாரிப்பது எப்படி?

மாதுளையை சாப்பிட்ட பின், அந்த தோலை தூக்கி எறியாமல், சிறு துண்டுகளாக்கி வெயிலில் 2-3 நாட்கள் உலர்த்தி, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அடைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பொடி 3 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

வறட்சியான சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்: மாதுளை பொடி – 1 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2-3 துளிகள் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன் பால் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
* மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். * பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.

எண்ணெய் பசை சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்: மாதுளை பொடி – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2-3 துளிகள் ரோஸ் வாட்டர் – சிறிது

செய்முறை: அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

நன்மைகள் இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முதுமைப் புள்ளிகள், கரும்புள்ளிகள், பருக்களால் வந்த தழும்புகள், கருவளையங்கள் போன்றவற்றை நீக்குவதோடு, சருமத்தின் நிறத்தை அதிகரித்து வெளிக்காட்டும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.





எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




பொதுவாக வீட்டு சமையல் தேவைகளுக்காகவே நாம் பூண்டைப் பாவிக்கின்றோம். அதேபோன்று பூண்டு அனைத்துவிதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாகவும் இருக்கின்றது. எனினும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஒரு சிறந்த பொருளாக பூண்டு உள்ளதை அதிகமானவர்கள் அறிவதில்லை.

அதன் பயன்பாடுகளைப் பார்ப்போம்
ஒரு மேசைக்கரண்டி பூண்டு சாற்றினை ½ கப் தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடேற்றி இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், அந்த எண்ணெய் கொண்டு ஸ்கொல்ப்பை மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து, ஷம்போ போட்டு அலச, தலைமுடியின் வளர்ச்சியைக் காணலாம்.

பூண்டு எண்ணெயுடன் 1 மேசைக்கரண்டி வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி ஸ்கொல்ப்பில் படும்படி தடவி, விரலால் சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவும் பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் 1 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய் மற்றும் 1 மேசைக்கரண்டி பூண்டு சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷம்Nபுh போட்டு அலச வேண்டும். இதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

அதேபோன்று 1 மேசைக்கரண்டி நறுக்கிய பூண்டு மற்றும் 1 மேசைக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருந்த தொற்றுகள் நீங்கி, மயிர்கால்கள் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.



MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget