Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

September 2016


உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர்பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.

மேலும் அதிக எடை உள்ள பொருட் களை தூக்கினால் தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டு பாடாய் படுத்திவிடும். ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும், முழங்கால் எலும்பின் மேல்பகுதியும் இணையும் இடமே முழங்கால் மூட்டு ஆகும். தொடை முழங்காலுக்கான முக்கிய ‘ஜங்ஷன் இது. நமது உடலில் அமைந்திருக்கும் பெரிய மூட்டும் இதுதான். வயதாக வயதாக தொந்தரவு தரும் மூட்டும் இதுதான்.

நமது எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கிறதே அந்த இடம்தான் மூட்டுகள். அதில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை உண்டு. தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு. ஓடுகிறோம். விளையாடுகிறோம். வேலைகளைப் பார்க்கிறோம். இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது. இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை. மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.

முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும். இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

தடுக்கும் முறைகள்…

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். (இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

6. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
சந்தனத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து உடலில் தடவி வந்தால்  வேர்குரு குறையும்.

வெங்காயத்தை சாறு எடுத்து வியர்குருவின் மீது தடவி வந்தால் வேர்குரு குறையும்.

மூல்தானி மெட்டி கூட வேர்க்குருவிற்கு சிறந்த வீட்டு மருத்துவமாகத் திகழ்கிறது. 4 டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, 2 டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். பின் வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில், இந்தக் குழம்பைப் பூசி 30 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.

சந்தனப் பவுடர் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் 2-3 டேபிள் ஸ்பூன் பன்னீர் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் அதனை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் நன்கு அலசி விடவும்.

பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வேர்க்குரு உள்ள இடங்களின் மீது போர்த்துமாறு மூடிவிடவும். பஞ்சு அல்லது துணியிலுள்ள ஈரம் முழுவதும் உறிஞ்சும் வரை காத்திருக்கவும். இம்முறையை ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறை செய்யவும். இல்லையெனில் வேர்க்குரு உள்ள இடத்தின் மீது குளிர்ந்த நீரை கொண்டு கழுவலாம். வேர்க்குருவின் அரிப்பிற்கும், எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும் முறை இதுவே.

ஆலமரப்பட்டை வேர்க்குருவை போக்க சிறந்த பொருளாக பயன்படுகிறது. காய்ந்த ஆலமரப் பட்டைகளை எடுத்துக் நன்கு பொடியாக அரைக்கவும். இப்பொடியை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவவும். இது வேர்க்குருவின் அரிப்பிற்கும் எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும்.எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

கொழுப்பு உறைந்து விடும்

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் நம் நாட்டவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான் தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயநோயாளிகள் பாதிப்பு

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்துகொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும். இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும்.

பூரான்  கடித்தால் ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான் கடிதானே என்ற அலட்சியம் கூடாது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு முன்னதாக சில முதலுதவி சிகிச்சைகள் செய்யலாம்.

பூரான் கடித்த இடத்தில் உடனடியாக சவர்க்காரம் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். இதனால் அரிப்பும் கட்டுப்படும். கடிபட்ட இடத்தில் சூடாக இருக்கும். வலியும் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஜஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குளிர்ச்சியாகி வலி கட்டுப்படும்.

பூரான் கடித்தது என்று தெரிந்ததும் குழந்தைகளுக்கு பனை வெல்லத்தை கரைத்து கொடுக்கலாம். சாப்பிடத் தெரிந்த குழந்தையாக இருந்தால் பனைவெல்லம் தந்து சாப்பிட சொல்லலாம். அதேபோல் அரிக்கும் இடத்தில் ஹைடிரோ கார்டிசோன் கிரீம் தடவ அரிப்பு மறையும். தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பாதித்துவிடும். அதனால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒருநாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வெந்நீரில் பருக வேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக்கூடாது.

குப்பைமேனி இலையையும் உப்பையும் சரி அளவாக 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒரு மணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும். புளி நீக்கி உணவை சாப்பிட வேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும்.

பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பல மாதமாகி விட்டால் ஊமத்த தைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்க வேண்டும். ஊமத்தம் செடியின் நூறு கிராம் எடுத்து நன்றாக இடித்து கால் லீற்றர் நல்லெண்ணெயில் ஊறப் போடவும்.

சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறிக் குளிக்க வேண்டும். உடலெங்கும் தடிப்பு, சொறி போன்ற சில்லரைத் தொந்தரவும் நீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெளியிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும்.

புற்று நோயிலிருந்து கூட நம்மை காப்பாற்றிக் கொள்ளலம். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாலட்டாகவோ, அல்லது அப்படியேசாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? இதைப் படியுங்கள்.

உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் :

வெள்ளரிக்காயில் 95% நீர்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் :

அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாய் துர் நாற்றத்தை போக்க :

உங்களுக்கு வாய் துர் நாற்ற பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும்வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.

இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும். ஈறுகளைப் பலப்படுத்தும். அதோடு வாய் துர் நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.

எப்படி கட்டுப்படுத்தலாம்?

வாய் துர் நாற்றத்தை போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள்.

30 நொடிகள் வரை வைக்கவும். சக்திவாய்ந்த பேக்டீரியா எதிர்ப்புத் திறன் வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர் நாற்றத்தை போக்கும்.

உடல் எடை குறைக்கும் :

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை பார்ப்பீர்கள். கொழுப்பு செல்களை கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும்.

மேலும் உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..

இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்… சொல்லிவிட்டு போகட்டும். ஆனால், நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.

கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான.  அது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை பலகீனம் அடையும். குழந்தை பேரு இல்லாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம்.

இது அவர்களது நன்மைக்காகத்தான். என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!?

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
நாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச் சத்துக்கள், சில உயிரிப்பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால், தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப் பொருள்களாகவோ, சிறுநீர்பாதையில், பையில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் இவற்றின் வீதங்கள் மாறி சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் சிறுநீரக கல் உருவாக காரணமாகின்றன.

சிறுநீர் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்:

சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், இயல்பாக உடல் பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர் அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப்பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்றும் கூற முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். சிறுநீரில் உண்டாகும் கற்களில் கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கியவைகளே அதிகம் காணப்படுகின்றன.

யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மில்லிகிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி குறைபாடுகள் சிலவற்றால் இந்த அளவை தாண்டும் போது மிகுதியான  யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அதுகற்களாக படிவதுண்டு .நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது.

அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

யாருக்கு வரும்:

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வரலாம். பெண்களைப் பொறுத்த வரை, 50 வயதைத் தாண்டும் போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒரு முறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

அறிகுறிகள்:

சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க் குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும் போது இடுப்பைச் சுற்றி தாங்க முடியாதவலி ஏற்பட்டு, கடுமையான வியர்வை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து, எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறுநீரகப்பையில் கற்கல் சேராமல் தடுப்பது எப்படி?

அதிகமான பழங்கள், காய்கறி, பருப்பு உட்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் வகைகள்:

பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக் கொள்ளவேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

சேர்க்க வேண்டிய பழங்கள், காய்கறிகள்:

திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, போன்ற பழ வகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
இருமல், தொண்டை வலி இருப்பவர்கள், சிறிதளவு வசம்பையும்,    மிளகையும் மென்று, தின்னலாம்.

பால் சேர்க்காமல் டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் தொண்டை வலி நீங்கும்.

உப்பு நீரால் கொப்பளிப்பது நல்லது.

சூடான நீராகாரங்களைப் பருகுவதும் நல்ல பலனைத் தரும்.

நீராவி பிடிப்பது (தொண்டையில் படும்படி) பிடிக்கலாம்.

சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்துத் தொண்டையில், அதாவது கழுத்துப் பகுதியில் தடவுங்கள். கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.

சிறிது தண்ணீரை மிதமான சூட்டில் வைத்து கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து, தொண்டை பகுதியில் வைத்து, கரகர என்று செய்தல் வேண்டும்

வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது வலி போகும் என்று சொல்வார்கள்.

கற்பூரவல்லி இலை சாறு எடுத்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.

துளசி இலைகள் போடப்பட்ட தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தொண்டையில் புண் வராது.

தண்ணீரைக் காய்ச்சும்போது, ஒரு பிடி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து அருந்தலாம். தொண்டைக்கு இதமாக இருக்கும்.

இரவு படுக்கும்போது, பாலில் மஞ்சள்தூள், தேன், பொடித்த மிளகு போட்டு அருந்த, தொண்டை வலி நீங்கி, இதமாக இருக்கும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி - 1/2 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அலவு
கறிவேப்பிலை - சிறிதலவு
காய்ந்த மிளகாய் - 2
மிளகுட்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - அரை மூடி சாறு
உளுந்து - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை நறுக்கி வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி இவகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைதாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பிறகு மணத்தக்காளியை போட்டு வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவைத்து அதை அரைத்த கீரை கலவையில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். இதில் தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு 5 சொட்டு விட்டு கலக்கி பரிமாறவும். சுவையான மணத்தக்காளி சூப் தயார்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

1. நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

2. இதன் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

3. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும்  நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு,  சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.

4. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக  செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.

5. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம்,  எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும்  போக்குகிறது.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
இருமல், வறட்டு இருமலுக்கு உடனடி தீர்வுகள் இயற்கை வைத்தியத்தில் உள்ளது.

இருமலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்
* கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

* இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்லை அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

* நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.


* இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

* வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

* உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

* பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
இந்தியர்கள் கண்டெடுத்த அற்புத மருத்துவம், ஆயுர்வேதம். இயற்கையான முறையில், இயற்கை மூலிகைகளைக் கொண்டு அனைத்து வகை உடல் நல குறைபாடுகளுக்கும் தீர்வுக் காணும் முறையினைக் கொண்டது. ஆனால், இன்று நாம் இதைத் தவிர்த்து பக்கவிளைவுகளை பக்காவாக தரும் ஆங்கில மருத்துவத்தை தான் நம்பி ஆட்டு மந்தை போல விழுந்துக் கொண்டிருக்கிறோம்.

ஆயுர்வேத முறையில் அவரவர் உடல்நிலையை அறிந்து மருத்துவம் அளிக்கப்படும். ஆனால், ஆங்கில மருத்துவத்தில், அனைவருக்கும் ஒரே வகையான் மருந்துகளும், மருத்துவ முறைகளும் தான் பின்பற்ற படுகின்றன.

உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு தனி நபரின் உடல்நிலைக்கும் தனிப்பட்ட மருந்து தான் பயனளிக்கும். அவ்வாறான மருத்துவ முறை தான் சரியானது. சமீபக் காலங்களாக ஆங்கில மருத்துவத்திலும் மரபணு சார்ந்து மருத்துவம் செய்ய பெரும் புரட்சி ஏற்பட்டு வருகிறது.

இனி, நம் பாம்பரிய மருத்துவமான ஆயுர்வேத மருத்துவத்தின் படிஉங்கள் உடல் வகையை பற்றி அறிந்துக்கொள்வோம்….

வாத – உடல் உருவம்

வாத, உடல் வகையை சேர்ந்தவர்களுக்கு, உடல் எடை அதிகரிப்பது கடினமாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களது வளர்சிதை மாற்றமானது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க செய்யும். ஆனால், அவர்களுக்கு எலும்புகளின் வலிமை அதிகமாக இருக்கும். இவர்களது சருமம் மிகவும் வறட்சியாக இருக்கும். இவர்களது நாடி வேகமாக இருக்கும்.

வாத – வாழ்க்கை முறை

இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சோர்வடையாமல் வேலை செய்வார்கள். இவர்களது தூக்கம், உறக்கம் [போன்றவை எல்லாம் சரியான நெறியில் இருக்காது. நேரம் தவறி செய்வார்கள். இவர்களது உடலுறவு தன்மை அதீத வகையில் இருக்கும்.

வாத – மனநிலை

இவர்களது மனநிலை மிக வேகமாக மாறும். வெற்றி, தோல்வி என எந்த நிலையிலும் இவர்களது மனநிலை அதே இடத்தில தேங்கி நின்றுவிடாது. இவர்கள் எந்த விஷயத்தையும் மிக எளிதாக, விரைவாக கற்றுக்கொள்வார்கள்.

வாத – இயற்கை

இவர்களுக்கு கூச்ச சுபாவம் இருக்கும். தன்னம்பிக்கை குறைவு. பொறுமை இருக்காது, நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையவர்கள். மன அழுத்தம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வாத – பேசும்முறை

மிக வேகமாக பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதிகமாக பேசுவார்கள், கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

பித்த – உடல் உருவம்

உடல் எப்போதும் சூடாக உணரும் பண்புடையவர்கள். உடல் எடை அளவில் சரியாக இருப்பவர்கள். இவர்களுக்கு தலைமுடி நரைத்தலும், சொட்டை விழுகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு செரிமானம் இலகுவாக நடக்கும். சருமம் மென்மையாகவும், சதை போட்டும், மச்சங்கள் அதிகமாகவும் இருக்கும்.

பித்த – வாழ்க்கை முறை

உணவு மற்றும் உடலுறவில் மிகவும் வலிமையாக இருப்பார்கள். சுமாராக தான் தூங்குவார்கள். இவர்களை தொந்தரவு செய்வது கடினம். நாடி வலிமையாக இருக்கும்.வெயில் இவர்களுக்கு பிடிக்காது.

பித்த – மனநிலை


புத்திசாலியாக இருப்பார்கள், கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்கள், லட்சிய வெறி இருக்கும், வாழ்க்கையை விரும்பி வாழ்வார்கள், எதையும் கட்சிதமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எளிதாக எரிச்சல் அடைவார்கள்.

பித்த – இயற்கை

காதலை வெளிபடுத்த தயங்குவார்கள். பணத்தை பத்திரமாக செலவு செய்வார்கள். தலைமை குணம் இருக்கும். போராடும் குணம் உள்ளவர்கள்.

பித்த – பேசும் முறை

மிகவும் சத்தமாக பேசும் வழக்கு கொண்டிருப்பார்கள்.

கபம் – உடல் உருவம்

உருவத்தில் பெரிதாக இருப்பார்கள், அகண்ட தோள் மற்றும் இடை , அடர்த்தியான் கூந்தல் மற்றும் உடல் உறுதி அதிகமாக இருக்கும். இவர்களுக்கு உடல் எடை அதிகமாகவும், பற்கள் மிக வலிமையாகவும், நாடி சரியான அளவில் இருக்கும்.

கபம் – வாழ்க்கை முறை

பசியின்மை குறைவாக இருக்கும், செரிமானமும் மிக மெதுவாக தான் செயல்படும். ருசியாகவும், வகை வகையான உணவுகளும் சாப்பிட விரும்புவார்கள். உடல் உழைப்பு மிகவம் குறைவாக தான் செய்வார்கள். நிறைய நேரம் தூங்கும் பண்புடையவர்கள். ஆயினும் நிறைய ஊக்குவிக்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

கபம் – மனநிலை

மெதுவாக கற்றுக்கொள்ளும் திறன் உடைய இவர்கள், அனைத்தையும் நினைவில் கொள்வார்கள். உணர்ச்சிகளை சமநிலையில் பாதிகப்பதில் வல்லவர்கள்.

கபம் – இயற்கை

தங்களது சுற்றுவட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த நபராக இருப்பார்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்கள். உணர்ச்சிவசப்படுவதில் மெல்ல மெல்ல ஆரம்பித்து உச்சம் அடையும் பண்புடையவர்கள். குழந்தைத்தனமான, விரும்பும் வகையில் இருப்பார்கள். கூட்டமாக இருக்க விரும்புவர்கள்.

கபம் – பேசும் முறை

பொறுமையாகவும், அமைதியாகவும் பேசும் மனோபாவம் கொண்டவர்கள்

தேவைகள்

உங்கள் உடலுக்கு என்ன தேவை என அறிந்துக் கொள்ளலாம். ஊட்டச்சதில் இருந்து, மருத்துவம் வரை உங்கள் உடலுக்கு எந்த வகையான மருத்துவம் தேவை என்பது வரை அறிந்துக் கொள்ளலாம்.

சமநிலை

உங்கள் உடல்நிலை மற்றும் மனநிலையை சமநிலையில் பேணிக்காக்க இது உதவும். மற்றும் உங்கள் உடல்நிலை சமநிலையை விட்டு தடுமாறும் போது தெரிந்துக்கொள்ள உதவும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
குழந்தை பால் குடிக்கவில்லையென்றால் அது தாய்மார்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கும்.

உங்கள் குழந்தைக்கு பால் மட்டுமே ஆகாரமாக இருந்து, அதனை குழந்தை குடிக்க மறுத்தால் நீங்கள் குழந்தை நல மருத்துவரை உடனே அணுகுதல் மிகவும் முக்கியம். கைக்குழந்தை பால் குடிக்க மறுக்கும் சூழல் பெற்றோருக்கு பிரச்சனை அளிப்பதாகவும், மிகுந்த சவாலாகவும் இருக்கும்.

இத்தகைய சூழல் திடீரென உருவாகி இருக்குமானால், ஏதேனும் பிரச்சனை என்றோ, உங்கள் குழந்தை ஏதோ அசௌகரியமாக உணர்ந்துள்ளது என்றோ அர்த்தம். அதனாலேயே அது பால் குடிக்க மறுத்திருக்கலாம்.

ஆனால் இத்தகைய சூழல் பிறப்பிலிருந்தே நிலவி வருமானால், குழந்தைக்கு தாயின் மார்பிலிருந்து பால் குடிப்பதில் ஏதோ அசௌகரியம் இருப்பதாகவே அர்த்தம்.

சில வேளைகளில் பிறந்தவுடன் தாயின் முளைக்காம்பைப் பற்றி பால் குடிக்கும் செயலைத் தொடங்குவது குழந்தைக்கு சிரமமாக இருக்கும். சில சமயங்களில் முதல் சில தடவைகளில் சாதாரணமாக பால் குடிக்கிய குழந்தை போகப் போக அது பால் குடிக்க கற்றுக்கொள்ளும் சமயத்தில் சில நேரம் பால் குடிக்க மறுக்கலாம்.


குழந்தை பிறப்பில் இருந்து பால் புகட்டுவதில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி பல நாட்கள் கழிந்த பின்னரும் கூட இப்பிரச்சனை எழலாம். இதற்குப் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் நிறைய உள்ளன. உங்களின் குழந்தை பால் குடிக்க மறுப்பதற்கு இவற்றுள் எது காரணமாக உள்ளது என்பதைக் கண்டறிந்தால் தான் அதனை நீங்கள் சரிப்படுத்த முடியும்.

குழந்தையை தூக்கியவுடனேயே அது அழுகிறதா அல்லது பால் கொடுக்க முயற்சிக்கும் போது மட்டும் தான் அழுகிறதா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். சில குழந்தைகள் தங்கள் வாய்க்கு ஒவ்வாத காரணத்தினால் எதையுமே வாய் மூலம் உட்கொள்ள விரும்பாமல் பால் குடிக்க மறுப்பர்.

சில வேளைகளில் பாலின் வரத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதை தாய் அறிவதில்லை.

அதனால் கூட குழந்தை பால் குடிக்க மறுக்கலாம். குழந்தை பால் குடிக்க விரும்பாத பட்சத்தில், அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். மேலும், இந்த பிரச்சனை குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகாவிட்டால், குழந்தை நல மருத்துவரை உடனடியாக அணுகி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது அவசியம்.

குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில், குழந்தை பாலை மட்டுமே உட்கொள்ளும் பட்சத்தில் இத்தகைய சூழல் உருவாகுமானால் கூடிய விரைவில் மருத்துவரை அணுகுவது மிக மிக முக்கியம்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
நந்தியா வட்டை முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மூலிகை, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக, கண்நோய் மற்றும் பல்நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நந்தியா வட்டையின் இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்ற அனைத்தும் மருத்துவ பயனுள்ளவை.

இதில், செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களான, அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் உள்ளன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அமிலம் ஆகியவையும் உள்ளன.

கண் நோய்க்கு சிறந்தது: நந்தியா வட்டையின் இலைகளின் பாலை, காயங்களின் மேல் பூசினால் வீக்கம் குறையும். கண் நோய் நீங்கும். நந்தியா வட்டைப் பூ நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம் ஆகியவற்றை போக்கும். இதில் ஒற்றைப்பூ,

இரட்டைப்பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுத்தால் கண் எரிச்சல் மற்றும் வலி நீங்கி குளிர்ச்சியாகும். நந்தியா வட்டைப்பூவை கசக்கி, கண்களில் இரண்டொரு துளி விட்டு வந்தால், சில தினங்களில் கண்களின் விழித்திரையில் படர்ந்துள்ள பூ மறைந்து போகும்.

மலர்களின் சாற்றை எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், கண் எரிச்சல் குறையும். நந்தியா வட்டை பூக்கள் வாசனையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. அழியாத மை தயாரிக்க, நிறமூட்டியாகவும் பயன்படுகிறது. நந்தியா வட்டைப்பூ, 50 கிராம், களாப்பூ, 50 கிராம் ஆகியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு, நல்லெண்ணெயில் ஊற வைத்து, 20 நாட்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளிகளை காலை மாலை கண்ணில் விட்டு வந்தால், கண்ணில் படரும் பூ, சதை வளர்ச்சி மற்றும் பலவித கண் நோய்கள் மற்றும் பார்வை குறை நீங்கும்.

பல் நோய்க்கு நந்தியா வட்டை வேரை, கஷாயமிட்டுக் குடித்தால் வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். தோல் நோய்கள் குணமாகும். வேர்ப்பட்டையின் கசப்பு தன்மை வயிற்றுப் பூச்சியை கட்டுப்படுத்தும். பல்வலி போக்கும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பினால் பல் வலி நீங்கும்.

நந்தியாவட்டை எளிமையாக கிடைக்கும் மூலிகையாகும். கிராமங்களில் வேலியோரங்களில் வளர்ந்து இருக்கும். வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. ஆயுவேத மருந்து கடைகளிலும் கிடைக்கும். இம்மூலிகையை பயன்படுத்தும் முன், தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.
முகம் பொலிவோடு பிரகாசமாக இருக்க கிளின்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் போன்றவற்றை தினமும் செய்து வர வேண்டும். அதில் கிளின்சிங் மூலம் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேற்றப்படும். டோனிங் மூலம் சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை வெளியேறுவது தடுக்கப்படும். மாய்ஸ்சுரைசிங் மூலம் சருமத்தின் pH அளவு தக்க வைக்கப்படும்.

தற்போது கடைகளில் கெமிக்கல் கலந்த டோனர் உள்ளதால், அவற்றைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முழுமையாக நீக்கப்பட்டு, சருமத்தின் வறட்சி அதிகரித்து, பொலிவற்றதாக காட்சியளிக்கும். ஆனால் இயற்கை டோனர்களைப் பயன்படுத்தினால், அதனால் எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

உங்களுக்கு இயற்கை டோனர்கள் எவையென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு நம் வீட்டு சமையலறையில் உள்ள அந்த டோனர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

புதினா இலைகள் .

புதினா இலைகள் சிறந்த டோனராக செயல்படும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக வெளியேற்றவும் உதவும். அதற்கு புதினா இலைகளை கொதிக்க வைத்த நீரில் போட்டு, குளிர வைத்து, பின் அந்த நீரால் முகத்தைத் துடைத்து எடுத்த பின், மீண்டும் அந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஜெல் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு, டோனராகவும் செயல்படும். அதற்கு அந்த ஜெல்லை தினமும் முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.


தக்காளி ஜூஸ்

தக்காளி சருமத்தின் பொலிவைத் தக்க வைத்து, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும். அதற்கு தக்காளி சாற்றில் தேன் கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின் கழுவ வேண்டும்.

ஐஸ் கட்டி

ஐஸ் கட்டி சிறந்த டோனராகவும் செயல்படும். அதற்கு ஐஸ் கட்டியை துணியினுள் வைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் முகம் உடனடியாக பிரகாசமாகும்.

வினிகர்

வினிகரும் டோனர் போன்று செயல்படும். வினிகரில் உள்ள அசிட்டிக், சருமத்தின் pH அளவை சீரான அளவில் தக்க வைக்கும். அதற்கு வினிகர் தண்ணீரை சரிசம அளவில் கலந்து, அக்கலவையில் காட்டனை நனைத்து, முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget