Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

October 2016


மலம் கழிக்கும் போது, மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவது என்பது  ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்பிரச்சனையால் அவஸ்தைப்பட்டிருப்போம்.

சிலருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு சிறிய பிரச்சனை காரணமாக இருந்தாலும், இன்னும் சிலருக்கு அது தீவிர உடல்நல பிரச்சனையினாலும் ஏற்படும்.

உடலின் உட்பகுதியில் அதுவும் மலக்குடல் அல்லது மலப்புழையின் பாதையில் ஏதேனும் தொற்றுகள், காயங்கள் மற்றும் இரத்தக்கசிவுகள் இருந்தாலும், மலம் கழிக்கும் போது எரிச்சலை சந்திக்கக்கூடும்.

இந்நிலை இப்படியே நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இங்கு மலம் கழிக்கும் போது மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காரமான உணவுகளை உட்கொண்டு வந்தால், அதன் காரணமாக மலம் கழிக்கும் போது மலப்புழையில் எரிச்சல் ஏற்படக்கூடும்.

அளவுக்கு அதிகமான கார உணவுகள் சில நேரங்களில் வயிற்றுப்போக்கை கூட ஏற்படுத்தும். மலப்புழையில் சிறு பிளவுகள் ஏற்பட்டாலும் எரிச்சலை உணரக்கூடும்.

அதுவும் மிகவும் இறுகிய மலத்தை வெளியேற்றும் போது சென்சிவ்வான சருமத்தைக் கொண்ட மலப்புழையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, அதனால் எரிச்சலை சந்திக்க நேரிடும்.

இன்னும் சில நேரங்களில், இரத்தக்கசிவுடன் கூடிய மலம் வெளியேறவும் வாய்ப்புள்ளது.

சிலருக்கு ஹெர்பீஸ் தொற்றுகள் மலப்புழையின் அருகில் உள்ள சருமத்தில் வெடிப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில் மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். குறிப்பிட்ட நோய்த்தொற்றுகள், மோசமான சுகாதாரம் மற்றும் அவ்விடத்தில் ஏற்படும் தொடர்ச்சியான அரிப்புக்களால், மலம் கழிக்கும் போது எரிச்சலுடன் மிகுந்த வலியையும் அனுபவிக்க நேரிடுகிறது.

எப்போது குதத்துக்குரிய நரம்புகள் வீங்கி இருந்தாலோ அல்லது அவ்விடத்தில் சதை வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலோ, மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.

மலச்சிக்கல் மற்றும் இதன் தீவிர நிலையான பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அதன் காரணமாகவும் மலம் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலியை சந்திக்க நேரிடும்.

புரோக்டால்ஜியா ஃபுகாக்ஸ் (Proctalgia Fugax) என்னும் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எரிச்சல் மற்றும் வலியை உணரக்கூடும்.

இந்நிலையின் போது அவ்விடத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்துவிட்டு, உடனே மருத்துவரை அணுகுங்கள்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




தூங்கி எழுந்தவுடன், உரே இடத்தில் தொடர்ந்து சோமடபலாக இருந்துவிட்டு எழுந்தவுடன் கைவிரல்கள், கழுத்து, இடுப்பு என்று அனைத்து மூட்டு இணைப்புகளிலும் நெட்டி முறிப்பது சிலரது வழக்கம்.

இன்னும் சிலர் மூளையைக் கசக்கக்கூடிய வேலைகளுக்கு இடையில் அடிக்கடி நெட்டி முறிப்பார்கள்.

விரல் எலும்புகளின் மூட்டுகளுக்கு இடையில் சுற்றி வரும் ஒருவகையான திரவமே உங்களை நெட்டி எடுக்கத்தூண்டுகிறது. பதட்டம் அதிகமாக இருப்பவர்களும் நெட்டி முறிப்பார்கள்.

மன அழுத்தம் உள்ளவர்களும், மனநோய் சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

எப்போதோ ஓறிரண்டு முறை நெட்டி முறிப்பதால் மிகப்பெரிய விளைவு எதுவும் ஏற்படாது. எனினும் அடிக்கடி தொடர்ந்து அதனை செய்யக்கூடாது. எந்தப் பழக்கமுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்தில்தான் முடியும். இரண்டு எலும்பு மூட்டுகளின் இடையில் உள்ள தசைநார்களே மூட்டுகள் உராய்வதைத் தடுக்கின்றன.

தொடர்ந்து அவ்வாறு செய்யும்போது இந்த தசைநார்கள் கிழிந்துவிடும் அபாயம் உள்ளது. விரல்களை அளவுக்கு அதிகமாக மடக்கும் போது தசைநார்களின் வேலையை முடக்கிவிடும்.

அதுவே ஆர்த்ரைடிஸ் என்று சொல்லக்கூடிய முடக்குவாதம் வரக் காரணமாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




சவுச்சவ் இதய நோயாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும் தன்மையுடையது,

இதயத்திற்கு நல்லது. . .
(Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை ‘B’ விற்றமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் ‘B’ விற்றமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.

2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி) . .

வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த அண்டி-ஆக்ஸிடெட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாறும் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசெய்யும் அது மற்றும் இன்றி இந்த அண்டி-ஆக்ஸிடெட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.

உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese). . .
சவுச்சவ், முட்டை சேர்த்து காலை உணவாக உண்ணுங்கள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.

மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber). . .
குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper). . .
தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.

ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc). . .
சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஓமோன்களை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது (Vitamin K). . .
உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium). . .
சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி பொட்டாசியம்  பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

மூளை வளர்ச்சிக்கு நல்லது (Vitamin B6). . .
ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

கால் தசைப்பிடிப்புக்களை தடுக்க உதவுகிறது (Magnesium). . .
ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்புப்பை தடுக்கும் உதவும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




இருமல், சுவாசக் குழாயின் உண்டான பாதிப்பை உணர்த்தும் அறிகுறி. சுவாசக் குழாயில் கிருமிகள் அல்லது தூசு வரும்போது அதனை நீக்க முற்படும்போது வருவதுதான் இருமல். அதனை வெளியேற்ற சுவாசப் பகுதிகளில் எதிர்ப்பு செல்களும் அலர்ஜி செல்களும் போராடும். அந்த சமயங்களில் இருமல் உண்டாகும்.

இருமலில் இரு வகை உள்ளது. வறட்டு இருமல் மற்றும் தொற்றினால் உண்டாகும் இருமல். வறட்டு இருமல், தூசு போன்ற எரிச்சலூட்டக் கூடிய புகை ஆகியவற்றால் உண்டாகும் அலர்ஜி.

கிருமிகளால் உண்டாகும் தொற்றினால் வரக் கூடிய இருமல்தான் சளியுடன் வரும் இருமல்.அலர்ஜி மற்றும் ஜலதோஷம் ஆகிய இரு வகை இருமலுக்கும் ஏற்ற மூலிகை கலந்த நிவாரணங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளது. அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மஞ்சள் பூண்டு கலந்த பால் :பாலில் இரு பூண்டு பற்களை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்கள். இரவுகளில் குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சளில் கர்க்யூமின் என்ற கிருமிகளை எதிர்த்து போராடும் மூலக்கூறு உள்ளது. இது சுவாசத்தில் உள்ள அலர்ஜி மற்றும் கிருமிகளை விரட்டிவிடும்.

அமிழ்தவள்ளி ஜூஸ் :உங்களுக்கு நாள்பட்ட இருமல் தொடர்ந்து இருந்தால் இந்த கசாயம் மிகவும் பலனளிக்கும். அமிழ்த வல்லி சாறு ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். தினமும் காலையில் 2 ஸ்பூன் இந்த சாறினை குடித்து வந்தால், இருமல் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேன் மற்றும் அதிமதுரம் :தேன், அதிமதுரப் பொடி மற்றும் பட்டைப் பொடி ஆகியவற்றை சம அளவிலான கால் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை மாலை என இரு வேளைகளில் குடித்தால் விரைவில் குணமாவீர்கள். அருமையான மருந்து.

இது தவிர மிளகை பொடி செய்து நெய்யுடன் கலந்து இரு வேளை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இஞ்சியை அல்லது சுக்குவை தட்டி நீரில் போட்டு காய்ச்சி குடித்தாலும் இருமல் கட்டுப்படும்.
எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




கண்ணு சொக்கும் வரை, சிவக்கும் வரை மொபைல் பயன்படுத்திவிட்டு தான் உறங்க செல்கிறோம். அதே போல உறங்கி எழுந்ததும் மீண்டும் அதே மொபைல் மின்னஞ்சல் பார்ப்பது, முகநூல் நோண்டுவது லைக் இடுவது என நாளை துவக்கிறோம். சிலர் மலம் கழிக்கும் நேரத்திலும் கூட மொபைல் நோண்டுவார்கள்.

ஆனால், இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் 60 நொடிகளுக்குள் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள்.

இது உடலில் நிகழ்த்தும் ஆரோக்கிய அற்புதங்களை அறிந்தால், நீங்கள் இந்த பழக்கத்தை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள்….

வளர்சிதை மாற்றம்

ஒரு பெரிய டம்ளரில் 300 மி.லி அளவிலான நீர் நீங்கள் எழுந்தவுடன் பருகுவதால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் 24% அதிகம் ஒன்றரை மணிநேரத்தில் அதிகரிக்கிறது.

நச்சுக்கள்

உங்கள் சிறுநீர்கள் அற்புதமான அளவில் நச்சுக்களை வடிக்கட்ட ஆரம்பிக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கும். உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கெமிக்கல்களை நீக்க இது உதவும். ஒட்டுமொத உடல் செயல்திறனை ஊக்குவிக்கும்.

பசியை குறைக்கும்

தூங்கி எழுந்த 60 நொடிகளில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடன்ல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நீங்கள் சரியாக உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும், நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. மேலும், இது நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் வலுவடைய செய்கிறது.

ஆரோக்கியமான சருமம்

நமது உடலில் படர்ந்து பெரிதாய் இடம் பெற்றிருக்கும் உடல் உறுப்பு சருமம் தான். இதை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நீங்கள் சீரான அளவில் நீர் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதை சரியாக பின்பற்றுவதால் சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

குடல் இயக்கம்

ஒருநாள் நீங்கள் சரியாக நீர் குடிக்காமல் இருந்தாலும், குடல் இயக்க செயற்பாட்டில் தாக்கங்கள் உண்டாகும். இதனால் மலம் கழிப்பதில் பிரச்சனைகள் உடனாகும்.

காலை எழுந்ததும் 60 நொடிகளுக்குள் நீர் குடிப்பதால் மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஒரு மாதம்

ஒரு மாதம் தொடர்ந்து தூங்கி எழுந்த 60 நொடிகளில் தண்ணீர் குடித்து பாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன அற்புதங்கள் உண்டாகின்றன என்பதை நீங்கள் உணர முடியும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?

இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது.

புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.

மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது.

அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்…

சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 3 நிலைகள் உள்ளன.

முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும். 3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது.

இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின், ‘ஸ்லிங்’ எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது…

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம்.

இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும்.

கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தால் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்க செய்யும். 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும்.

சிலர் கூறுவது மிகவும் தவறான விஷயம் ஆகும். இது சற்று வயது முதிர்ந்தவர்களுக்குப் பொருந்தும்.ஆனால் இளவயதில் உள்ளவர்கள் 14- தொடக்கம் முதல் 35 வயது வரை உள்ளவர்கள், வாரத்தில் 4 முறைகூட விந்தை வெளிப்படுத்தலாம்.

பேரீச்சம் பழம் மிகவும் அருமையான மருந்தாக அமைகிறது. பேரீச்சம் பழம் என்பது எல்லாக் கடைகளில் விற்கும் பேரீச்சம்பழத்தை நினைக்கவேண்டாம்.

பொதுவாக அரபு நாடுகளில் இப்பழத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள சர்க்கரைத் தண்ணீரை எடுத்துவிட்டுப் பின்னர் அதன் சக்கையைதான் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.

இது உண்மையான பேரீச்சம்பழம் அல்ல. பொதுவாக நல்ல கடைகளில் உலர்ந்த பேரீச்சம்பழம் கிடைக்கும். அதனை வாங்கி பாலுடன் உட்கொண்டால் போதும்.

தினமும் 5 பேரீச்சம்பழத்தை பாலுடன் உட்கொண்டு வந்தால் 15 நாட்களில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.அத்தோடு பாதாம் பிஸ்தா போன்றவையும் உண்ணலாம்.

கோழி ஆட்டு இறைச்சி போன்ற உணவுகளைத் தவிர்த்து, சுறா மீன், காடை மற்றும் நண்டு போன்ற உணவுகளை உண்ணலாம். இதில் ஆண்மையை அதிகரிக்கும் பல தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளது.



எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




எம்மில் பலரும் ஒரு அசௌகரியமான சூழலில் ஆரோக்கிய ரீதியாக தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதபோது அதன் பல வெளிப்பாடுகளில் முதன்மையானது தும்மல்.

அத்துடன் தும்மும் போது அதன் வேகம் குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆனால் ஒரு தும்மல் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பது குறித்து தெரியாது. ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தும்மலின் தூரத்தை நவீன கமெரா மூலம் படமாக்கி, ஒரு தும்மல் 25 அடி தொலைவு வரை பயணிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல். எமது நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் பணி.

இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலமும் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித் தள்ளும் முயற்சியில் சவ்வுப் படலம் அதிக அளவில் நீரைச் சுரக்கிறது.

இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளியேத் தள்ளுகின்றன. இதுதான் தும்மல். இப்படித் தும்மும்போது அத்துமீறி அங்கிருக்கும் அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் தும்மலின்போது வெளியேற்றப்படும் ஒரு சிறுநீர்த்துளி 20 முதல் 26 அடி வரை பயணிக்கிறது என்றும், வெளியேற்றப்படும் தூசு அல்லது துகள் 6 அடி தூரத்திற்கு வெளியேற்றப்படுகிறது என்றும்.

இவையாவும் 0.15 விநாடிக்குள் நடைபெற்று முடிந்துவிடுகிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால் இனி தும்மும் போது கைகளில் அவசியம் கைகுட்டையை வைத்துக் கொண்டு சக மனிதர்களுக்கு பரவாமல் தும்ம பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




கழுத்து, அக்குள், தொடையின் உள் பகுதி போன்ற இடங்களில் கருமையான படலம் ஏற்படுவதற்கு காரணம் அதிகமாக வியர்வை வெளியேறுவது, வாக்சிங் அல்லது ஷேவிங் செய்வது, டியோடரண்ட் பயன்படுத்துவது மற்றும் சூரியக்கதிர்கள் அவ்விடத்தில் அதிகமாக படுவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சில சமயங்களில் உடல் பருமன், சர்க்கரை நோய், இரையக குடலிய அல்லது சிறுநீர்பிறப்புறுப்பு புற்றுநோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஹார்மோன் சிகிச்சை எடுத்து வருவதன் மூலம் அவ்விடங்கள் கருமையாக இருக்கும்.

இக்காலத்தில் மக்கள் அழகை, நிறத்தை மேம்படுத்த பல சரும நிபுணர்களை சந்தித்து, தங்களது அழகை மேம்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் சரும நிறத்தை அதிகரிக்க, சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்க பணத்தை கண்டபடி செலவு செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளைப் பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கல் உப்பு – 1 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன் *

ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் கருமையாக உள்ள அக்குள், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை நிற க்ளே பவுடர்- 1 டேபிள் ஸ்பூன்

பால் – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை – 1/2 டேபிள் ஸ்பூன்

ஒரு பௌலில் வெள்ளை நிற க்ளே பவுடரை போட்டு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஒன்றை வாரத்திற்கு 3 முறை பின்பற்றி வந்தால், கருமை படலம் நீங்குவதை நன்கு காணலாம். இந்த வழிகளை பின்பற்றும் போது சூரியக்கதிர்கள் அதிகம் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் வெளியே செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோசனைத் தடவுங்கள். தண்ணீர் அதிகம் பருக வேண்டும் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளான பாதாம், பப்பாளி, அவகேடோ, ப்ராக்கோலி, முட்டை, குடைமிளகாய், பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். வேண்டுமானால், இந்த பேக்களுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிப்பது கடினமாக இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் தடுப்பு முறைகளைப் பின்பற்றி டெங்கு காய்ச்சல் வராமல் தப்பிக்க முடியும். டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு…

டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்புக் கஷாயம் அருந்தலாம். சித்த வைத்திய மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

நிலவேம்புக் குடிநீர் தயாரி்க்கும் முறை…

நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்சம் வேர், சந்தனக் கட்டை, பேய் புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் ஆகியவற்றைச் சமஅளவில் இடித்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் பொடியை அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, கால் லிட்டராகச் சுண்டவைத்து அருந்த வேண்டும். கசப்புச் சுவை நீங்க, கஷாயம் குடித்த பின், பனங்கற்கண்டைச் சுவைக்கலாம்.

டெங்கு வராமல் தடுக்க…

டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தவிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு…

*ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தம்பழம், நெல்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மழைக் காலத்தில் சளி பிடிக்கும் என நினைத்தால், சர்க்கரைக்குப் பதிலாக உப்பு போட்டுக் குடிக்கலாம்.

*தினமும் உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் போன்றவற்றைச் சேர்க்கலாம்.

*நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணப் பொடியை, ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் இரவில் படுக்கப்போகும் முன் அருந்துவது மிகவும் நல்லது.

*சீந்தில் கொடியின் தண்டு, வில்வ இலை, துளசி, மஞ்சள், நெல்லிக்காய், பளிங்கு சாம்பிராணி, திப்பிலி ஆகிய மூலிகைகள் நோய் எதிர்ப்புச் சக்தியை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

*கொய்யா, நெல்லிக்காய், கீரைகள், காய்ந்த திராட்சை, பேரீச்சை, அத்தி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முட்டை, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள மத்தி, சால்மன் போன்ற மீன்களைச் சாப்பிடலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.

ரத்தக் கசிவு வராமல் இருக்க

உணவு உண்ட பிறகு, நெல்லி லேகியம், கரிசாலை லேகியம், இம்பூரல் லேகியம் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்க

பப்பாளி இலைச் சாற்றை 5 – 10 மி.லி வெறும் வயிற்றில் அருந்தினால், டெங்கு காய்ச்சல் குறைந்து, சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.

கொசு வராமல் தடுக்க

*கொசுவை அழிக்கும் எலெக்ட்ரானிக் பேட்களை பயன்படுத்துவதும் ஒரு சிறந்த வழிதான்.

*தரமான, வசதியான கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.

*கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை எடுத்து, அதைத் தண்ணீரோடு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டில் ஸ்ப்ரே செய்யலாம்.

*வீட்டில் நொச்சி, வேப்பிலை, காட்டுத் துளசி, பேய்த் துளசி, அசோலா (கம்மல் பாசி), ரோஸ்மெரி, லெமன் கிராஸ், கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பதும் நல்லது.

*வியர்வை வாசம் இருந்தால் கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்பதால், தினமும் இருவேளை குளிப்பது நல்லது.

*மாலையில் வீட்டில் வேப்பிலை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றைத் தெளிக்கலாம்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




நகரங்களில் இருக்கும் ட்ராஃபிக் அசாதரணமானது. பஸ்ஸிலோ , காரிலோ போவதை விட பைக்கில் போவது மிகவும் வசதி. சிக்னலில் நிற்கும் வண்டிகளின் சந்து பொந்துகளில் கூட போய் விடலாம். நேரம் மிச்சமாகும். இரு சக்கரங்களில் ஹெல்மட் அணியாமல் போக முடியாது . ஆனால் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும் என்பது தெரியுமா?

தொடர்ந்து உபயோகித்தால் பத்துவருடங்களில் முடி சொட்டையாகிவிடக் கூட வாய்ப்புண்டாம். அதற்காக ஹெல்மெட் அணியாமல் போகாதீர்கள். ஏனெனில் தலை முடியை விட உங்கள் தலை மிக மிக முக்கியம் . மாறாக தலைமுடி உதிர்வதை எப்படி தடுக்க முடியும்.அதற்கான வழிமுறைகளை என்னெவென்று கையாளுங்கள் . அதுதான் சிறந்தது. இதோ உங்கள் முடியை பாதுகாக்க சில டிப்ஸ்.

ஹெல்மெட் அணிவதனால் எப்படி முடி உதிர்கிறது?

தலையில் வெகு நேரம் ஹெல்மெட் அணியும்போது , சூடும் ,வியர்வையும் ஒருசேர உங்கள் தலைமுடியில் ஏற்படுகிறது. இதனால் உங்கள் ஸ்கால்ப் பாதிக்கப்படுகிறது. கிருமிகளின் தொற்றுக்களால், பொடுகு,அரிப்பு , ஏற்பட்டு முடி பலமிழந்து உதிர ஆரம்பித்து விடுகிறது.

எப்படி முடி உதிர்வதை தடுக்கலாம்?

ஹெல்மெட் அணியும் முன் தலையில் ஸ்கார்ஃப் கட்டிக் கொள்ளுங்கள். இறுக்கமாக கட்டக் கூடாது. இது ரத்த ஓட்டத்தை பாதிக்கும். ஸ்கார்ஃப் காட்டனாக இருக்க வேண்டும். இதனால் ஹெல்மெட்டினால் வரும் வெப்பம் தலையினைப் பாதிக்காது. தலையில் ஏற்படும் வெப்பததை காட்டன் ஸ்கார்ஃப் உறிஞ்சுக் கொள்ளும்.

ஸ்கார்ஃபை வாரம் இரு முறை துவைப்பதை மறந்துவிடாதீர்கள். இல்லையென்றால் அதில் அழுக்கு சேர்ந்து அதுவும் தலைமுடி உதிரக் காரணமாகிவிடும்.
அவ்வப்போது சிக்னலில் ஹெல்மெட் கழட்டி தலையில் காற்று படும்படி விடுங்கள்.இது வியர்வை ஏற்படாமல் தடுக்கும்.

உங்களுக்கு முன்னதாகவே ஸ்கால்ப்பில் பிரச்சனை இருந்தால் அவற்றிற்கு வைத்தியம் செய்த பின் ஹெல்மெட் அணியுங்கள். இல்லையென்றால் வெகு சீக்கிரம் முடியை இழக்க நேரிடும் .

உங்கள் ஹெல்மெட்டினை வேறொருவருக்கு தராதீர்கள் அல்லது வேறொருவரின் ஹெல்மெட்டினை நீங்கள் போடாதீர்கள். இதனால் மற்றவரிடமிருந்து வரும் பொடுகு அல்லது ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

இது தவிர்த்து நீங்கள் வீட்டில் பண்ண வேண்டியது உங்கள் முடியையும் ஸ்கால்ப்பையும் பராமரிப்பதே. அதற்கான வழிகளை கீழே காணுங்கள்

சோற்றுக் கற்றாழை :

இரு ஸ்பூன் சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை 1 ஸ்பூன் புளிப்பான தயிரில் கலந்து தலையின் வேர்க்கால் மற்றும் முடி நுனி வரை தடவ வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்வதால் தொற்றுக்களிலிருந்து உங்கள் முடியை மீளச் செய்யும். வேர்க்கால்கள் பலப்படும்.

இஞ்சிச் சாறு:

இஞ்சியை துருவி அதிலிருந்து சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். போதிய அளவு இஞ்சிச் சாற்றினை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தலையில் ஸ்கால்ப்பில் படும்படி செய்ய வேண்டும்.காய்ந்த பின்ழுவங்கள். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு, அரிப்பு பிரச்சனைகள் குறைந்த பின் வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது.

வாரம் மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் . அதில் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளியுங்கள். போதிய அளவு நீர் குடியுங்கள். அதோடு மேற்கூறியவைகளை பின்பற்றுங்கள். அதன் பின் உங்கள் தலைமுடி மிக பத்திரமாக இருக்கும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.



MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget