Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

உங்களுக்கு சர்க்கரைவியாதி உள்ளது என சுட்டிக்காட்டும் நீங்கள் அறிந்திராத 5 அறிகுறிகள்!

Advertisement


பொதுவாக ஆண்கள் 40 வயதுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்க்கரை வியாதி, இதய நோய்கள் மன அழுத்தம் என பல நோய்கள் தாக்குகின்றன.

இதற்கு 30 களிலேயே நீங்கள் ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நடுத்தர வயதையும் இளமையான காலம் போல் கழிக்கலாம்.

இதற்கு உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மிக அவசியம். உடற்பயிற்சியே செய்ய வேண்டுமென்பதில்லை.

உங்க வீட்டு வேலைகளை செய்யலாம். வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதினால் இரண்டு முக்கிய நன்மைகள் ஏற்படும்.

உங்கள் உடல் தசைகளுக்கு தேவையான பயிற்சிகளை பெறுவீர்கள். இன்னொன்று உங்கள் மனைவியின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

சர்க்கரை வியாதி :
இன்று அதிக அளவில் இந்தியாவில் ஆண்களை தாக்கும் நோய்களில் சர்க்கரை வியாதி முதலிடம் என்று இங்கே பல கட்டுரைகளில் பார்த்தாயிற்று.

அதன் பொதுவான அறிகுறிகளை நீங்கள் தெர்ந்து வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் நீங்கள் அறிந்திராத அதே சமயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அறிகுறிகளும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

கண் பார்வை அதிகரிக்கிறதா?
நீங்கள் கண்ணாடி போடுபவராக இருந்தால்இகண்ணாடி போடாமலேயே கண் பார்வை திடீரென அதிகரிக்கிறதா? மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.

சர்க்கரை வியாதியினால் கண் பார்வை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே போல் நன்றாக தெரிந்த கண் இப்போது மங்கலாக தெரிகிறதா? இதுவும் சர்க்கரைவியாதின் அறிகுறியாக இருக்கலாம். கண் பார்வை வழக்கத்திற்கு மாறாக கூடினாலோ குறைந்தாலோ, பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

உடலில் அரிப்பு ஏற்படுகிறதா?
ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது அது ரத்த ஓட்டத்தை பாதிக்கின்றது. இதனால் சருமத்தில் மிகுந்த வறட்சி உண்டாகி அரிப்பை தருகிறது.

குறிப்பாக கை, கால், பாதம் ஆகிய இடங்களில் வறட்சியினால் அரிப்பு உண்டானால் எதற்கும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

காது ஒழுங்காக கேட்கிறதா?
உங்களால டிவியில் எப்போதும் கேட்கப்படும் ஒலியில் கேட்கமுடியவில்லையா? யாராவது பேசினால் திரும்பவும் சொல்லுங்கள் என கேட்டு காதை தீட்டுகிறீர்களா? இது சர்க்கரைவியாதியின் மிக ஆரம்ப நிலையாகும். உடனடியாக பரிசோதனை செய்து பாருங்கள்.

கழுத்து பகுதிகளில் தோல் மாறுகிறதா?
திடீரென கழுத்தின் மடிப்பு, முழங்கை, ஆகிய பகுதிகளில் குஷன் போல் மெத்தென்று சதை தடிமனாகிறதா அல்லது சரும நிறம் மாறுகிறதா? மிக அதிக குளுகோஸ் அளவு ரத்தத்தில் அதிகரித்ததன் விளைவு இது. இதுவும் ஆரம்ப நிலையாகும்

தூக்க வியாதி மற்றும் குறட்டை சத்தம் :
பகலில் குறட்டை சப்தத்துடன் தூங்குகிறீர்களென்றால் உங்கள் சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது என்று பாஸ்டனில் உள்ள ஜோஸ்லின் டயாபடிஸ் சென்டரின் தலைமை மருத்துவர் ஒஸ்மா கூறுகிறார்.

இரவுகளில் தூக்கமின்மையும் அல்லது அரைகுறை தூக்கமும், பகலில் தூங்கி வழிவதும் தொடர்ந்து ஏற்பட்டால், ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகரித்து குளுகோஸ் அளவை அதிகரிக்கச் செய்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget