Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

விஷ உயிரினங்கள் கடித்தால் எடுக்க வேண்டிய முதலுதவிகள்! அதிகம் பகிருங்கள்

Advertisement



விஷ உயிரினங்கள் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக முடியாத சூழ்நிலை ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் பற்றிய ஒரு அலசல் பார்வை.

ஒவ்வொரு விஷ உயிரினங்களும் மனிதனை கடிக்கும் போது, அதனை குணப்படுத்த இயற்கை மருத்துவ முறைகள் விஷத்தன்மைக்கு ஏற்றாற்போல் முதலுதவி மருத்துவம் இருக்கின்றன.

அதனைப்பற்றி விரிவாக காணலாம்

கண்ணாடி விரியன்: இந்த பாம்பு கடிக்கும் போது பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்க வேண்டும்.

நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் விரித்து நல்ல பாம்பு கடித்த நபரை அதில் படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறை உட்கொள்ளச் செய்ய வேண்டும்.

தேள்: இந்த விஷ உயிரினம் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்க வேண்டும்.

வண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து சாப்பிட வேண்டும். தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே முதலுதவியாக பயன்படுத்தலாம்.

சிலந்தி: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து சிலந்தி கடித்த இடத்தில் கட்ட வேண்டும்.

வெறிநாய்: மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.

எலி: வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் எலி கடித்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். இது நாய்க்கடிக்கும் ஏற்றது.

பூனை: தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு, வெண்ணெய் போல் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்து ஒரு வாரம் காலை மாலை குடிக்க வேண்டும் .

பூரான்: பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்க வேண்டும். அதேசமயம் நெருப்புப் பக்கம் செல்லக் கூடாது.

நட்டுவாக்காலி: கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்க வேண்டும். நட்டுவாக்காலி குழந்தையை கடித்தால் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தர வேண்டும்.


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.

You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget