Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

தூங்குவதற்கு இரண்டு தலையணை கேட்பவரா நீங்கள்? இத கொஞ்சம் படிங்க!

Advertisement



தூங்கும்போது நம் தலை அமரும் ஆசனம் தான் தலையணை. ஆனால் பலர், தலையணையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதும் உண்டு.
அப்படி தலையணையை மிக அருகாமையில் வைத்துக் கொண்டு தூங்கும்போது, நுரையீரலில் தீர்க்கமுடியாத நோய்கள் உண்டாகின்றன என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், அதுதான் உண்மை என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்…

பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைகழக விஞ்ஞானிகள் 2005ம் ஆண்டில், அந்நாட்டில், பலரது வீடுகளில் பயன்படுத்தும் தலையணைகளில் பூஞ்சை பாதிப்பு இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

தலையணைகளில் உள்ள பூஞ்சைகள், பேனின் கழிவுகள், தூசிகள் உள்ளிட்டவைகளை உணவாக உட்கொள்கின்றன. அதன்மூலம் இனப்பெருக்கம் அடைந்து பெருகும் ஆஸ்பர்ஜில்லஸ் வகை பூஞ்சைகள், ஸ்போர்களை உண்டாக்குகின்றன. கண்ணுக்குத் தெரியாத இந்த ஸ்போர்கள் தலையணையில் பரவி கிடக்கின்றன. இந்த ஸ்போர்கள் மிகமிக லேசான எடை கொண்டவையாக இருப்பதால், காற்றில் எளிதாகப் பரவுகிறது.

அவ்வாறு தலையணை முழுவதும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்போர்கள், நாம் சுவாசிக்கும்போது நுரையீரலின் உள்ளே சென்று நோய்த்தொற்றை உண்டாக்குகின்றன. இந்த தொற்றுகள், தொடர்ந்து பல நாட்களுக்கு நீடிக்கும்போது குணப்படுத்த முடியாத குரோனிக் பல்மோனரி நோயாக மாறிவிடுகிறது.

நோயின் அறிகுறிகள்

தொடர் இருமல், சுவாசித்தலில் பிரச்னை, அதிக சோர்வு, உடல் எடை குறைதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். தகுந்த நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால், இது மரணம் வரை கொண்டு சென்றுவிடும்.

நோயின் தீவிரம்

பொதுவாக நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, பெரும்பாலான நோய்களை உடலுக்குள் பரவ விடாமல், எதிர்க்கும் வலிமை கொண்டது. இந்த ஆஸ்பர்ஜில்லஸ் ஸ்போர்களையும் நமது உடல் எதிர்க்கத்தான் செய்கிறது.

ஆனால், ஆஸ்துமா, சுவாசித்தல் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டோர் அல்லது சமீபத்தில் நுரையீரல் அறுவை சிகிச்சை செய்துகொண்டோர், நுரையீரல் செயல்பாட்டில் குறைபாடு உடையோரை, இந்த ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சைகளின் ஸ்போர்கள் மிக எளிதாக தாக்குகின்றன.

இந்த பூஞ்சை ஸ்போர்களின் தாக்கத்தை உடனடியாகக் கண்டறிய இயலாததால், அது தீவிரமடையும் போது மட்டுமே அதன் பாதிப்பை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

அதனால், நாம் பயன்படுத்தும் தலையணை மற்றும் தலையணை உறைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அதோடு, அவ்வப்போது சூரிய ஒளியில் வைத்து பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தினால், நாம் நோயற்ற வாழ்வு வாழலாம்.

தலையணையைக் கட்டிப் பிடித்து உறங்கும்முன், சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். சுவாசப் பிரச்னை இல்லாத சுகமான உறக்கம் உங்களைத் தழுவும்….


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.

You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget