Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

அதிகமாக எலுமிச்சை ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?

Advertisement


பொதுவாக எலுமிச்சையை, அதிக அளவு நன்மை தரக்கூடிய பக்க விளைவுகள் இல்லாத, ஒன்றாகவே அறிந்திருக்கிறோம். ஆனால், தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்தும் போது அதுவும்கூட சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

வறண்ட சருமத்துக்கு

சாதாரணமாக, எண்ணெய் பசையுள்ள சருமத்துக்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தும் போது அது சருமத்தைிலுள்ள எண்ணெய் பசையைப் போக்கும். ஆனால், வறட்சியான, அல்லது எண்ணெய்ப்பசை குறைவாக உள்ள சருமத்தில் எலுமிச்சை சாறு தடவும்போது, அது சருமத்தை மேலும் வறட்சியாக மாற்றிவிடும்.

பல் கூச்சம்

பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியை குணப்படுத்த எலுமிச்சை சாறும் உப்பும் சேர்த்துப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், உடனடியான பலன் வேண்டும் என நினைத்து, அதிக அளவில் எலுமிச்சைச் சாறினைப் பயன்படுத்தினால், அதுவே பல் கூச்சத்தை உண்டாகக் காரணமாகிவிடும்.

நெஞ்செரிச்சல்

எலுமிச்சை சாறு வயிற்று உபாதைகளைத் தீர்க்கும். அதேசமயம், மிக அதிகமாக எலுமிச்சை சாறு குடிக்கும்போது, அதிலுள்ள சிட்ரிக் அமிலம் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

வயிறு மந்தம்

எலுமிச்சை மலச்சிக்கலைப் போக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். ஆனால் அதிக அளவில் எலுமிச்சைச் சாறினைப் பருகினால் அது வயிறை மந்தமாக்கும். வயிற்றில் எரிச்சலை உண்டாக்கிவிடும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget