Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

.

உங்கள் இதயத்துடிப்பை பாதிக்கும் காரணிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Advertisement




இதயம் மிக முக்கியமான உடல் உறுப்பு இதயத் துடிப்பு கொண்டு பல நோய்களையும் பாதிப்புகளையும் கண்டுபிடிக்கலாம். இதய துடிப்பை பாதிக்கும் விஷயங்கள் எவை என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதயம் மிக முக்கியமான உடல் உறுப்பு இதயத் துடிப்பு கொண்டு பல நோய்களையும் பாதிப்புகளையும் கண்டுபிடிக்கலாம். இதய துடிப்பை பாதிக்கும் விஷயங்கள் எவை என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதயம் நன்றாக இயங்குகிறது என்பதன் முதல் அறிகுறி இதயத்துடிப்புதான். உடல் நலம் பரிசோதிகப்படும்போது முதலில் நாம் பரிசோதிப்பது இதயத்துடிப்பைதான். சாதரண நிலையில் ஒரு மனிதனின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 60-75 வரை துடிக்கும். இது இயல்பானது. பிறந்த குழந்தைகளுக்கு 70-190 என இருமடங்கு அதிகமாக இதய துடிப்பின் விகிதம் இருக்கும். பிறகு வளர வளர படிப்படியாக குறைந்து பிள்ளைகளுக்கு 80- 120 வரை இருக்கும். வயதானவர்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும். உங்களுக்கு காய்ச்சல் இருந்தாலும் இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இவ்வகையில் இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்க வெளிப்புற காரணன்ங்கள் எவை என பார்க்கலாமா? தொடர்ந்து படியுங்கள்.

உடலின் வெப்ப நிலை : 
கோடை காலத்தில் அல்லது வெப்பமான பகுதிகளில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். சாதரணமாக உடலின் வெப்ப நிலை 98டிகிரிதான். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது இதய துடிப்பும் மாறுபடும். சாதரண இதயத்துடிப்பை விட அதிகம் துடிக்கும்

உணவு சாப்பிட்ட பின் : 
உணவு சாப்பிட்ட பின் இதயம் ரத்தத்தை சிறுகுடல் மற்றும் இரைப்பை நோக்கி செலுத்துவதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதிய உணவு சாப்பிட்டதும் வேகமான இதயத்துடிப்பின் நேரமும் அதிகரிக்கும்.

உடற்பயிற்சியின்போது : 
உடற்பயிற்சியின்போது இதயம் அதிக ஆக்ஸிஜனை உட்கிரகிப்பதற்காககவும் கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றவும் தனது துடிப்பை அதிக்கரிக்கச் செய்கின்றது. நீர்சத்து குறைந்தாலும் இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

வயது : 
குழந்தைகளுக்கு இருமடங்கு இதயத்துடிப்பு உண்டாகும். வயது அதிகரிக்கும்போது, முதுமைஅடையும் போது இதயத் துடிப்பு குறைந்துவிடும்.

பாலினம் : 
பெண்களுக்கு ஆண்களை விட அதிக இதயத்துடிப்பு இருக்கும். ஹார்மோன் சம நிலை செய்வதற்காகவும், வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தவும் இதயத் துடிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும்.

காஃபி, தேநீர் : 
காஃபி மற்றும் தே நீர் நரம்பு மண்டல்த்தை தூண்டுவதால் இதயத்துடிப்பின் வேகமும் அதிக்கரிக்கின்றது. இவையோடு கோகோ கலந்த உணவுப் பொருட்களும் அட்ரினல் சுரப்பியை தூண்டுகிரது. இந்த சுரப்பியே இதயத் துடிப்பு அதிகரிக்க காரணமாகும்.


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget