Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

.

தங்கம் என்றால் என்ன? 22 கரட் மற்றும் 24 கரட் என்றால் என்ன? படியுங்கள் - பகிருங்கள்.

Advertisement




You May Also Like?


*தங்கம் என்பது*
தங்கம் என்பது மஞ்சள் நிறமுள்ள ஒரு உலோகம். இதனை ஆரம்பகாலங்களில் நாணயமாக பயன்படுத்தப்பட்டது. காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை மற்றும் வெப்பத்தினையும் மின்சாரத்தினையும் கடந்தும் தன்மையுள்ளதால் தங்கத்தில் துறுப்பிடிப்பதில்லை. தங்கம் 24 கரட்டில் இருந்து 9. கரட் வரை சந்ததையில் காணப்படுகின்றது. இதில் 24 கரட் 100 சதவீதம் தங்கமாகும் இதனை பிஸ்கட் மூலம் விற்பனை செய்ப்படுகின்றது.

சிரியா அலேப்போவில் சிறு குழந்தைக்கு மயக்க மருந்து இல்லாததால் குர்ஆன் வசனங்களை சொன்னவாரு ஆப்ரேஷன் செய்கிறார்கள் . (2016-12-17) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

22 கரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு மற்றும் வெள்ளி உலோகமும் கலந்து செய்யப்படும் ஆபரணங்கள் ஆகும். 18 கரட் தங்கம் என்பது 75 சதவீதம் தங்கமும் 25 சதவீதம் செம்பும்.வெள்ளியும் கலந்து செய்யப்படும் ஆபரணம் ஆகும். 14 கரட் என்பது 58.5 சதவீதம் தங்கமும் 41.5 சதவீதம் செம்பு, வெள்ளி கலந்த ஆபரணம் ஆகும். 9 கரட் தங்கம் என்பது 37.5 சதவீதம் தங்கமும் 62.5 சதவீதம் வெள்ளி. செம்பு கலந்த ஆபரணமாகும். தங்கத்திடன் செம்பு, வெள்ளி கலப்பு அதிகரித்தால் தங்கத்தின் பெறுமதி குறைவடையும்.

*மத்திய வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் பெறுமதியினைப் பொறுத்து பணத்தின் வெளியீடுகள் நடைபெருகின்றன*

ஒரு நாட்டின் நாணயச் செலாவணியில் தங்கத்தின் வகிபாகம் மிக முக்கியமாகும் . மத்திய வங்கி தங்கத்தினை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறு நாணயங்களை வெளியிடுகிறது. இதனால் தான் ஒரு நாட்டின் தங்கத்தின் இருப்பினை வைத்து அந் நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.

*தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது எவ்வாறு*

உலகில் முதலாவதாக 1919. செப்டம்பர்.12 ஆம் திகதி லண்டன் கோல்ட் மார்க்கெட் பிக்சிங் லிமிடெட் நிறுவனம் தங்கத்தின் விலையினை முதல் முதலாக உலக சந்தையில் முன்னணி வகித்த 5 வர்தகர்களுடன் ஒப்பந்தம் செய்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்தது. அதன் பிறகு உலகில் நடைபெற்ற போர் காரணமாக 1939 முதல் 1954 வரை லண்டன் கோல்டு மார்க்கெட் மூடப்பட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்வதும் நின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Like

தங்கத்தின் விலை 1980 ஜனவரி 21 ஆம் திகதி முதல் முதலாக தங்கத்தின் விலை சந்தையில் மீண்டும் அதிகரித்தது. இதன் பிறகு 2004 ஆண்டு உலகில் தங்க விற்பனையில் சிறந்து விளங்கிய லண்டன் 5 வர்தக நிருவனங்கள் போன் மூலம் கதைத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்தார்கள்.

தற்போது உலக சந்தை தங்கத்தின் விலையினை ஓன் லைன் மூலம் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணியில் இருந்த 3.30 வரை தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்கின்றார்கள். இதனால் தினம் தினம் தங்கத்தின் விலை குறைந்தும் கூடியும் காணப்படுகின்றது.

*அண்மைக் காலங்களில் தங்கத்தின் விலை உயர்ந்ததற்கான காரணங்கள்*

அகதிகளை வழிமறித்து, கொலைசெய்த ஈரானிய கும்பல்கள் (2016-12-17) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அமெரிக்காவின் முறையற்ற பொருளாதாரக் கொள்கையால் அமெரிக்கா ஏனைய நாடுகளிடம் இருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. இதன் காரணமாக டொலரின் பெருமதி ஒவ்வொரு நாளும் வீழ்சியடைந்து வந்தது இதனால் அமெரிக்காவின் டொலரினை கொள்முதல் செய்த நாடுகள். தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்தது. இதன் காரணமாக தங்கத்தின் தேவை மிக அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாகத்தான் அண்மையக் காலங்களில் தங்கத்தின் விலை அதிகாரித்துக் கொண்டு சென்றது.

சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வந்ததனால் தங்கத்தின் முதலீடு செய்வது பாதுகாப்பானது எனக் கருதப்பட்டதும். டொலரின் மதிப்பு குறைவடைந்து வந்ததனால் டொலரில் முதலீடு செய்யும்

தேவைகள் அதிகரித்து வருகின்ற போது தங்க உற்பத்தி அத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உயரவில்லை இந்த நிலையில் பல நாடுகள் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை அதிகளவில் கொள்முதல் செய்து வந்தமையும் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு காரணமாக இருந்தது.

*தற்போது தங்கத்தின் விலை விழ்சியடையக் காரணம்*
அண்மையில் நிதி நெருக்கடியில் காணப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரமும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதாரம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் டொலருக்கு முதலீடுகளை தற்போது திருப்பி விடுவதால் தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது.

எங்கள் மானத்தை காப்பாற்றி கொள்ள ஹலப் நகரை விட்டு வெளியேறிய நாங்கள் இறை உதவியால் வெல்வோம் எங்கள் இல்லங்களுக்கு மீண்டும் திரும்புவோம் சிரியா சகோதிரியின் அழுத்தமான இறை நம்பிக்கை (2016-12-17) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தற்போது நிதி நெருக்கடியில் இருக்கின்ற சைப்ரஸ் நாடு அந் நாட்டின் கடனை தீர்க்க கையிருப்பில் இருக்கும் 14 தொன் தங்கத்தை எந்த நேரமும் விற்பனை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இவ்வாறு சைப்ரஸ் தங்கத்தினை விற்பனை செய்தால் சர்வதேச நாடுகளில் இருக்கின்ற தக்கத்தின் பெருமதி மேலும் குறைவடையும் என்ற அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தினை விற்கத் தொடங்கியதால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குல் சிக்கியுள்ள ஸலோவீனியா, ஹங்கெரி, போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் தங்கத்தினை விற்பனை செய்ய தொடங்கினால் முதலீட்டார்களின் தங்கத்தின் பெறுமதி மிகவும் குறைந்துவிடும் என்ற அச்சம் காரணமாக தற்போது விலை குறைந்துள்ளது.

இணையத்தின் மூலமான தங்க வியாபாரம் தற்போது நடைபெறுவதால்; தங்கத்தின் விலை குறைவடைய காரணமாக அமைகின்றது

*தங்கத்தின் விலை தற்போது இருப்பதைவிட வீழ்சியடைய வாய்ப்புள்ளதா ?*
மத்தி தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் நாட்டில் பொருளாதாரம் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய யூனியன் உதவி செய்ய முடியாது என அறிவித்துள்ளது. இந்த நிலையில் சைப்ரஸ் நாட்டின் மத்திய வங்கியில் கையிருப்பில் உள்ள தங்கத்தினை விற்க முடிவு செய்கிறது இதில் தற்போது சைப்ரஸ் நாட்டில் 15.5 தொன் தங்கத்தினை மட்டும் விற்பனை செய்யப்போகிறது இவ்வாறு விற்பனை செய்யப்படும் தங்கத்தின் அளவுகள் மேலும் அதிகரிக்கப்டும் போது சர்வதேச சந்தையின் விலையில் பாதிப்பு ஏற்படுத்தும்

ஐரோப்பிய நாடுகளின் கையிருப்பில் உள்ள தங்கத்தில்; இத்தாலி 2452 தொன்தங்கத்தினையும். ஸ்பெயின் 283 தொன் தங்கத்தினையும், கிரீஸ் 112 தொன் தங்கத்தினையும் தற்போது விற்பனை செய்யப்போகிறது. இதனால் தங்கத்தினை முதலீடு செய்தவர்கள் நிலம், பங்குச்சந்தைகளில் வைப்புக்களை செய்கின்றமையினால் தற்போது இருக்கின்ற விலையினை விட மேலும் தங்கத்தின் விலை குறைவடைய வாய்ப்பு இருக்கின்றது.

மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளில் இருக்கின்ற தங்கத்தினை விற்பனை செய்தால் தற்போது இருக்கும் விலையினை விட பல மடங்குகள் குறைவடைய வாய்ப்பு உள்ளது.

சர்வதேச வர்த்தக பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது கையில் இருக்கின்ற தங்க இருப்புக்களை வெளிச் சந்தையில் விற்றால் மேலும் குறைவடைய வாய்ப்பு உள்ளது.

சவூதி ரியாத் பகுதியில் அட்டைப் பெட்டிக்குள் பிறந்த பச்சிளம் குழந்தை மீட்பு! வீடியோ(2016-12-17) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

*தற்போது விலைகுறைந்த நிலையில் தங்கத்தினை வாங்கலாமா ?*

தற்போது முதலீட்டார்கள் கை இருப்பில் உள்ள தங்கத்தினை விற்பனை செய்து விட்டு முதலீடுகளையும் வைப்புக்களையும் தங்கத்தினை தவிர்ந்து வேறு வியாபாரங்களில் முதலீடுகளை செய்கின்றார்கள.; இந்த நிலையில் தற்போது தங்கத்தினை முதலிடு செய்வதற்காக ஒருவர் வாங்குவது பெருத்தமற்றது.

அதிகாமக தங்கத்தினை கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகள் தற்போது பொருளாதர நெருக்கடிக்குல் சிக்கியுள்ள நிலையில் எந்த நேரமும் விற்பனை செய்யலாம். நிதி நெருக்கடிக்குல் சிக்கிய நாடுகள் தங்கத்தினை விற்பனை செய்தால் தங்கத்தின் விலை தற்போது இருக்கும் விலையினை விட பல மடங்கு குறைவடையும். இவ்வாறு குறைவடைந்தால் தற்போது அதிகம் தங்கம் வாங்கி வைத்கும் மக்கள் பாரிய நஷ்டத்தினை சந்திக்க வேண்டி வரும்.

*தற்போது தங்கத்தின் விலையினை யார் நிர்ணயிப்பது*

தங்கத்தின் விலையினை தற்போது நிர்ணயிக்கின்ற பிரச்சினை எழுந்துள்ளது. இதற்கான காரணம் தங்கத்தினை விற்பனை செய்யும் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள். பதுக்கி வைத்திருந்த தங்கத்தினை சந்தையில் விடும் எண்ணிக்கைகள் தற்போது அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை தற்பேது யார் நிர்ணயிப்பது என்பதனை உறுதியாக சொல்லமுடியாத நிலை தோன்றியுள்ளது

*இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடையுமா ?*

இலங்கையில் தங்கத்தினை முதலீடு செய்வதற்காக வாங்குபவர்கள் மிகக் குறைவாகும். இந்த நிலையில் 2013 ஆண்டு 4மாதம் 15 ஆம் திகதி வரை 53 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து சென்ற தங்கத்தின் விலை திடிர் என 2013.04.18 ஆம் திகதி ஒரு பவுண் தங்கத்
சேமித்தவர்கள் பணத்தின் பெருமதியினை இழந்துள்ளார்கள். மற்றும் வியாபரத்திற்காக தங்கத்தினை வாங்கி பதுக்கி வைத்தவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றர்கள்.

தந்தி டிவி ஒளிபரப்பவில்லையென்றால் என்ன, ஆன்லைன் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ள தீபா - காணொளி(2016-12-17) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொருளாதர நெருக்கடிக்குல் சிக்கிய நாடுகளும் தங்கத்திiனை விற்பனை செய்தால் இலங்கையில்  தற்போது இருக்கும் விலையினை விட தங்கத்தின் விலை குறைவடையலாம்.

(பழைய பதிவு என்றாலும் காலத்தின் தேவை, தங்கத்தின் விலை இறக்கம் கருதி அப்படியோ பதிவு செய்கின்றோம்.)


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget