Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

ஒரே நாளில் 2 கிலோ எடை குறைக்கணுமா? இந்த அற்புத பானத்தை டிரை பண்ணுங்க

Advertisementஉடல் பருமனால் நீங்கள் பல நேரங்களில் அசிங்கப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் எவ்வளவு முயன்றும் உங்களால் பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? அப்படியெனில் இந்த சிறப்பு டீ உங்களுக்கு தான்.

பொதுவாக காலையில் எழுந்ததும் அனைவரும் ஒரு கப் டீ அல்லது காபியைக் குடிப்போம். டீயைக் குடிப்பவர்களுள் சிலர் க்ரீன் டீ யையும், இன்னும் சிலர் ப்ளாக் டீயையும் குடிப்பார்கள். உண்மையில் டீ உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கக் கூடியது.

உங்களுக்கு டீ டயட் பற்றி தெரியுமா? அதிலும் க்ரீன் டீ மற்றும் பாதாம் பால் கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம் என்பது தெரியுமா?

டீ டயட்டின் நன்மைகள்:
இந்த டீ அற்புதமான சுவையில் இருப்பது மட்டுமின்றி, அடிக்கடி பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். மேலும் இந்த டீ உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும்.

இந்த டீ டயட் மூலம் ஒரே நாளில் 1/2 கிலோவில் இருந்து 2 கிலோ வரை உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் இந்த டீ டயட்டை மாதத்திற்கு 2 நாட்களுக்கு மேல் பின்பற்றக்கூடாது.

க்ரீன் டீ நன்மைகள்:

பொதுவாக பல ஆராய்ச்சிகளில் க்ரீன் டீயை குடித்து வருவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம் மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது தான். மேலும் க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் கொழுப்புக்களை ஆக்ஸிஜனேற்றமடையச் செய்யும். குறிப்பாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அவ்வளவு சக்தியை தன்னுள் கொண்டிருப்பது தான் க்ரீன் டீ.

தேவையான பொருட்கள்:
பாதாம் பால் - 1.5 லிற்றர்
க்ரீன் டீ பொடி - 2 டேபிள் ஸ்பூன்
 தேன் - சிறிது
இந்த ரெசிபிக்கு க்ரீன் டீ பையை வாங்கலாம் என்று நினைக்க வேண்டாம். க்ரீன் டீ பொடியை வாங்கிப் பயன்படுத்துங்கள். அது தான் நல்ல பலனைத் தரும்.

செய்யும் முறை:
* முதலில் பாதாம் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்கு சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் க்ரீன் டீ பொடியை சேர்க்க வேண்டும். * பின் அதை மூடி வைத்து 20 நிமிடம் கழித்து, வடிகட்டி தேன் சிறிது கலந்தால், டீ தயார்.

எப்போது பருக வேண்டும்?
இந்த டீயை 2 மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் என நாள் முழுவதும் பருக வேண்டும். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டுவதோடு, க்ரீன் டீ பாதாம் பாலை எளிதில் செரிமானமடையச் செய்யும்.

தண்ணீர் அவசியம்:
இந்த டயட்டைப் பின்பற்றும் போது, குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். ஏனெனில் இந்த டீ வலுவான சிறுநீர்ப் பெருக்கி. தண்ணீரைப் பருகுவதால், அது சமநிலைப்படுத்தி பராமரிக்கும்.

பருகக்கூடாதவர்கள்:
லாக்டோஸ் சகிப்புத்தன்மை, சிறுநீரகம் அல்லது பித்தப்பை நோய்கள், குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க இந்த டயட்டைப் பின்பற்றக்கூடாது. மேலும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், இந்த டயட்டைப் பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள். -

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget