Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

ஏன் ஒல்லியானவர்களுக்கு எள்ளு தர வேண்டும் ?

Advertisement


எள்ளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் இதய நோய், மூட்டு தேய்மானம், ரத்த அழுத்தம் என பலவித நோய்களிலிருந்து நம்மை காப்பாற்டிக் கொள்ளலாம். அதன் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம்.

எள் கடுகளவுதான் இருக்கும். ஆனால் நன்மைகள் மிக அதிகம். நமது கலாச்சார உணவுகளில் எள்ளை சேர்க்காமலில்லை. நமது நாட்டைப் போலவே ஐரோப்பியோ நாட்டிலும் எள்ளை சேர்க்கிறார்கள்.

எள்ளு சிறு நீரக விதை போன்ற தோற்றத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கிறது. வெள்ளை எள்ளு கருப்பு எள்ளு இரண்டுமே நாம் உபயோகிக்கிறோம். அதன் நன்மைகள் காரணமாகவே பல நூற்றாண்டுகளால எள்ளை பயிருடுகிறோம். அப்படி என்ன நன்மைகள் தருகிறது என பார்க்கலாம்.

எள்ளில் உள்ள சத்துக்கள் : 
எள்ளில் மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை தடுக்கும்.   ஃபைடோஸ்டீரால் எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

எந்த வகை எள் சிறந்தது : 
கருப்பு எள் வெள்ளை செள் மற்றும் சிவப்பு எள் என மூன்று வகைகளில் எள் இருக்கிறது. அதில் கருப்பு எள்ளுதான் சிறந்த பலன்களை கொண்டிருக்கிறது. வெள்ளை எள்ளு மத்திமமாக சிறந்தது.

எள் உணவு வகைகள் : 
எள்ளை வெளி நாட்டவரகள் பிரட், குக்கீஸ், கேக் போன்றவற்றில் அலங்காரமாக மேல் தூவி டெகரேட் செய்கிறார்கள். ஆனால் நாம் அதனை உணவாகவே சாப்பிடுகிறோம்.

இந்திய எள் உணவு வகைகள் : 
எள் உருண்டை பூப்பெய்த பெண்களுக்கு ஒரு சடங்காகவே கொடுத்து வருகிறோம். இது கர்ப்பப்பையை பலப்படுத்தும். இதனால் பின்னால் வரும் வயதுகளில் நோய் ஏற்படாமால் காக்கும். அதோடு முறுக்கு, சீடை ஆகியவ்ற்றிலும் கட்டாயம் சேர்க்கிறோம். அதோடு எள்ளும் பொடி, இட்லி மிள்காய் பொடி என தயாரிப்பதுண்டு.

நல்லெண்ணெய் : 
எள்ளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய். இது முற்றிலும் குளிர்ச்சி தரக் கூடியது. உடலில் மொத்த செல்களுக்கு ஊட்டம் அளிக்கிறது. இதயம் மற்றும் கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கும். கெட்ட கொழுப்பை குறைக்கும்

முட்டி பலம் : 
எள்ளில் அதிக கால்சியம் இருக்கிறது. இது எலும்பை பலப்படுத்தும். இணைப்பு திசுக்களுக்கு பலம் தரும். இதனால் வயதான பின் வரும் மூட்டு வலிக்கு டாட்டா காட்டலாம்.

எள்ளு யார் அதிகம் சாப்பிடக் கூடாது : 
எள் அதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது. விரைவில் ஜீரணிப்பதில்லை. அதுபோல் பித்த உடல் இருப்பவர்களுக்கு இன்னும் அதிக சூட்டை எள் தந்துவிடுவதால் அவர்கள் அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

நோஞ்சான் உடல் இருப்பவர்களுக்கு : 
உடலில் போதிய சத்துக்கள் இல்லாமல் இருந்தால் உடல் நோஞ்சான் போல் பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு தேவையான சத்துக்கள் எள்ளில் இருப்பதால் அதனை உணவில் செர்த்துக் கொள்ளும்போது உடல் பலம் பெறும்.

மன அழுத்தம் : 
இது மகிழ்ச்சியை தூண்டும் செரடோனின் சுரப்பை அதிகரிப்பதால் மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்வை தருகிறது.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget